டூயட் ஆட முடியலைனாலும் மச்சக்காரன்தான்பா! ரெண்டு ஹீரோயின்களை தட்டித் தூக்கிய அஜித்

Vidamuyarchi : லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது அக்டோபர் 2ல் தொடங்குவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இன்னும் அதே இரட்டை யோசனையில் தான் இருக்கிறார்கள். இதே படத்தோடு ஆரம்பித்தது தான் லியோ திரைப்படம்.

இந்தப் படம் முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருந்தது. எத்தனை எத்தனை பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் ஒரு தெளிவான முடிவில் வந்து நிற்கின்றது விடாமுயற்சி திரைப்படம்.

இதையும் படிங்க: கீர்த்திக்கு கல்யாணமாம்… ஆனா அந்த ஆளு இல்ல…! ட்விஸ்ட் வைத்த சூப்பர் நியூஸ்!

இதற்கான ஸ்கிரிப்டை தயார் நிலையில் வைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. ஆனால் அவரும் இந்த நேரம் ஒரு படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்திருப்பார். போதாத காலம் இந்த டீமிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட மகிழ்திருமேனியும் 7 மாதங்களை வீணடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க துபாயில் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறினார்கள். அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதையும் படிங்க: விஜயை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு திடீர் ஷாக் கொடுத்த மைக் மோகன்! சத்தமே இல்லாம முடிச்சிட்டாரே

ஏற்கனவே அஜித்தும் த்ரிஷாவும் இணைந்து 4 படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் சேர்ந்து நடித்த அந்த நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஐந்தாவது முறையாக ஜோடி சேரும் படம்தான் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித்துக்கு மனைவியாக த்ரிஷா நடிக்கிறாராம்.

இதில் மற்றுமொரு விஷயம் என்னவெனில் த்ரிஷாவோடு இனைந்து இன்னொரு நடிகையும் நடிக்க இருக்கிறார்களாம். நடிகை ஹூயுமா குரேஷிதான் இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக நடிக்கிறாராம். ஏற்கனவே அஜித்துடன் வலிமை படத்தில் நடித்தவர். அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் காலா படத்திலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெய்லர் வசூலை தொடக்கூட முடியாது… லியோ படக்குழுவை கதறவிடும் புது பிரச்னைகள்! ஐயகோ!

 

Related Articles

Next Story