கீர்த்திக்கு கல்யாணமாம்… ஆனா அந்த ஆளு இல்ல…! ட்விஸ்ட் வைத்த சூப்பர் நியூஸ்!

Published On: September 19, 2023
| Posted By : Akhilan

Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் கல்யாண வதந்திகள் அதிகரித்து இருக்கும் நிலையில் கல்யாணம் நடக்கும் என கீர்த்தி சொல்லி இருக்கும் தகவல் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றிய கதையாய் கொளுந்து விட்டு எரியத் தொடங்கி இருக்கிறது.

சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடிக்கும் கீர்த்தி இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி ஆனார். ஆனால் படம் ப்ளாப்பானது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் மற்றும் ரெமோ படத்தில் நாயகியாக நடித்து தன்னுடைய இடத்தினை கோலிவுட்டில் தக்க வைத்தார்.

இதையும் படிங்க: ஜெய்லர் வசூலை தொடக்கூட முடியாது… லியோ படக்குழுவை கதறவிடும் புது பிரச்னைகள்! ஐயகோ!

தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சாவித்ரியின் வரலாற்று படமான மகாநதி படத்தின் மூலம் தானும் ஒரு சூப்பர் நடிகை என கோலிவுட்டில் பெயர் எடுத்தார். தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தியை ட்ரோல் செய்வதும் நடந்து தான் வருகிறது.

இந்நிலையில் கீர்த்திக்கும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அடுத்த செலிபிரிட்டி ஜோடி உருவாகி விட்டனர் என கிசுகிசுத்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக வதந்திகள் அதிகரித்து வந்த நிலையில் என் மகள் குறித்து பரவும் செய்திகள் எதுவும் உண்மையில்லை. அப்படி ஒரு விஷயம் நடப்பதாக இருந்தால் நானே முறைப்படி அறிவிப்பேன் என கீர்த்தியின் தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: மஞ்சள் வீரன் டைரக்டர் லெவலுக்கு இறங்கிய அட்லீ… தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு!

தற்போது இந்த வதந்திகள் குறித்து பேசி இருக்கும் கீர்த்தி, நானும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான். எங்களுக்குள் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை. ஆனால் என்னுடைய திருமணம் நடக்கும். யாருடன் என்பது முறையாக அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.