Connect with us
banner

அடுத்த படத்திற்கு சம்பளமே வேண்டாம்.! அனிருத்தின் அதிரடி முடிவு.! பின்னணியில் பலே திட்டம்…

Cinema News

அடுத்த படத்திற்கு சம்பளமே வேண்டாம்.! அனிருத்தின் அதிரடி முடிவு.! பின்னணியில் பலே திட்டம்…

உலகநாயகன் கமல் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றி பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதுவரை 300 கோடி கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் தமிழக வெளியீட்டு உரிமத்தை வாங்கி தமிழகத்தில் வெளியிட்டார். இப்படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து வெற்றிவிழா  நேற்று நடந்தது.

அதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி ஸ்டாலின் என பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய உதயநிதி அனிருத்தின் ஒரு ராஜ தந்திரத்தை விளையாட்டாக வெளியே சொல்லிவிட்டார்.

இதையும் படியுங்களேன் – அஜித் தான் வேணும்.. அடம்பிடித்த ரஜினிகாந்த்.! வெளியான 15 வருட சீக்ரெட்…

அதாவது , ‘ சார், இனி அடுத்த படத்திற்கு சம்பளம் வாங்க கூடாது. அதற்கு பதிலாக ஏதேனும் ஏரியாவின் தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை வாங்கி விட வேண்டியது தான்’ என கூறினாராம். அந்தளவுக்கு இந்த விக்ரம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் மெகா ஹிட்ட்டாகியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘ இதுவரை எனக்கு ஷேர் மட்டுமே 75 கோடி வந்துள்ளது. பெரிய வெற்றி பெரும் என நினைத்தேன். ஆனால், இந்தளவுக்கு மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கவில்லை. ‘ என வெளிப்படையாக பேசியிருந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top