கார் கொடுத்தார்.. வாட்ச் கொடுத்தார்.. உங்களுக்கு என்ன கொடுத்தார்.? அனிருத்தின் அசத்தல் பதில் இதோ..

by Manikandan |
கார் கொடுத்தார்.. வாட்ச் கொடுத்தார்.. உங்களுக்கு என்ன கொடுத்தார்.? அனிருத்தின் அசத்தல் பதில் இதோ..
X

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பட நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார்.

இந்த திரைப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் ஏகபோக வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றியை அடைந்து வருகிறது. பல்வேறு இடங்களில் வசூல் சாதனைகளை செய்து வருகிறது. 300 கோடி வசூலை தாண்டி இப்படம் வசூல் செய்து கொண்டிருக்கிறது.

இதன்காரணமாக, தயாரிப்பாளர் கமல் ஹாசன் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். அதேபோல இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார்.

இதையும் படியுங்களேன் - 18 வருஷ பகையை பழிதீர்க்க காத்திருக்கும் தனுஷ்.!? சிக்குவாரா சிம்பு.?

அண்மையில், விக்ரம் வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அனிருத்திடம் பத்திரிக்கையாளர்கள் இந்த பரிசு பொருள்கள் பற்றி கேட்டனர். இயக்குனருக்கு கார் கொடுத்தார்கள், சூர்யாவுக்கு வாட்ச் கொடுத்தார்கள் உங்களுக்கு என்ன கொடுத்தார்கள் என்று பத்திரிக்கையாளர் கிண்டலாக கேட்கவே,

அதற்கு சற்றும் அசராமல் ராக்ஸ்டார் அனிருத், ' எனக்கு கமல் சார் விக்ரம் படத்தை கொடுத்தார். அதுவே எனக்கு கிஃப்ட் ' என்று அசால்டாக பதில் கூறினார். இசையமைப்பாளர் அனிருத், விக்ரம் படத்தில் சிறப்பான பின்னணி இசையை கொடுத்திருந்தார். அவரது இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது என்பது நிதர்சனமான உண்மை.

Next Story