Connect with us
aniruth

Cinema News

அரைச்ச மாவையே அரைக்கிறதுக்கு இத்தனை கோடியா? வெளிநாட்டில் மட்டையாகி கிடக்கும் அனிருத்

இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாக இருப்பது அனிருத்தின் இசைதான். அவரின் பாடல்கள் பெரும்பாலும் எல்லா வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்துபவையாகவே அமைந்திருக்கும். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் ரசிகர்களுக்கு அனிருத்தான் இப்போது ராக் ஸ்டாராக திகழ்கிறார்.

ஒரு வலிமை வாய்ந்த திரை பின்னனியில் இருந்து வந்தாலும் அவரின் எட்ட முடியாத வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் திகைக்கிறது. அப்பா ஒரு நடிகர், ரஜினிகாந்தின் மருமகன் இவையெல்லாம் தாண்டி சூப்பர் ஸ்டாருக்கு நிகரான ஒரு ராக் ஸ்டாராக மின்னுகிறார்.

இதையும் படிங்க : தான் செஞ்ச வினை தனக்கே திரும்பும்னு நினைச்சிருக்கவே மாட்டாரு! ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு வந்த நெருக்கடி

2011 ஆம் ஆண்டு ஒரு புது கிளர்ச்சி தமிழ் சினிமாவில் உதிக்கத் தொடங்கியது. ஆம். அது தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படம்தாம். அதுவரை ஏதோ கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருந்த தனுஷுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதுவும் அவரின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான் இந்தப் படத்தை  இயக்கினார். இந்த படத்தின் மூலம் தான் தனுஷ் அனிருத்தை அறிமுகம் செய்தார். அதுவும் இருவரும் சேர்ந்து ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை பாடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர்.

அதிலிருந்தே இருவரின் கூட்டணியையும் மக்கள் ரசிக்க தொடங்கினார்கள். தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, கமல் என மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து தன் இசையை உலகம் முழுவதும் பரவ செய்தார். இந்த நிலையில் சினிமாவையும் தாண்டி வெளி நாடுகளிலும் கச்சேரி செய்து வருகிறார்.

இதையும் படிங்க : ‘விடாமுயற்சி’யை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்! லண்டனில் இருந்து வேகமெடுக்கும் சுபாஸ்கரன்

வாரத்திற்கு இரண்டு மூன்று கச்சேரிகள் என அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளுக்கு சுற்றிக் கொண்டே வருகிறார் அனிருத். அதற்கான அவருக்கு வழங்கப்படும் தொகை 5 கோடியாம். சினிமாவில் சம்பாதிப்பதை விட இப்படி கச்சேரிகளுக்கு சென்று சம்பாதிக்கும் தொகை பல மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே தான் பாதி நாள்கள் அனிருத் சென்னையிலேயே இருப்பதில்லை. வெளி நாடுகளில் தான் பயணம் செய்து கொண்டு வருகிறார். அதுவும் இதில் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் படத்திற்காகவாவது புதியதாக இசை அமைக்கவேண்டும். ஆனால் இந்த கச்சேரிகளில் ஏற்கெனவே இசையமைத்த பாடல்கள் தான் பாடப்படும். இதற்கு 5 கோடியாம்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top