More
Categories: Cinema News latest news

அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.! வயித்தெரிச்சலில் அனிருத்.! காரணம் இதுதானாம்.?!

தற்போதைய சென்சேஷனல் தமிழ் சினிமா இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். ஏற்கனவே, விஜய், அஜித் , ரஜினி என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, அடுத்து கமல், அஜித், ரஜினி,  என தொடங்கும் அளவுக்கு படு பிசியாக வேலை செய்து வருகிறார் அனிருத்.

Advertising
Advertising

அனிருத் மற்றும் தளபதி விஜய் இணைந்து பணியாற்றிய கத்தி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் ஆல்பம் வேற லெவல் ஹிட்டாக அமைந்தது. மாஸ்டர் படம் மூலம் ஒரு மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் விஜயின் 67வது திரைப்படத்தை இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இதனை பார்த்த அனிருத் கண்டிப்பாக நமக்கு தான் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அனிருத்துக்கு ஏமாற்றமே கிடைத்துளளது என சினிமா வட்டாரம் தகவல் கூறுகிறது. அதாவது மாஸ்டர் படம் பாதி விஜய் படம் பாதி லோகேஷ் படம் என உருவானது. ஆனால், விஜயின் 67வது படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – பிள்ளையை எப்படி வளர்த்திருக்கார்னு பாரு.! கார்த்தி பற்றிய உண்மைகளை கூறிய பிரபல நடிகர்.!

இதில், ஹீரோயின், பாடல் இல்லாமல், கைதி ஸ்டைலில் எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். பாடல் இல்லாத காரணத்தால், அனிருத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, கைதி பட இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் அவரிடம் செல்ல லோகேஷ் முடிவு எடுத்துள்ளாராம். விரைவில்  67வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan