'நீ என்ன பெரிய புடுங்கியா?.. அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா?!' சிவாஜியா இப்படி கேட்டது?
நடிகர் திலகம் சிவாஜியுடன் பணிபுரிந்த சில மறக்கமுடியாத சம்பவங்களை கவியரசர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் நினைவுகூர்கிறார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
பிளஸ் 2 படித்து விட்டு (அந்தக் காலத்தில் பியுசி) அன்னக்கிளி படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். அப்பா எனக்கு நினைவுப்பரிசு கொடுத்தார். அது மறக்க முடியாத அனுபவம்.
சிவாஜி சாரோட 2 படம் ஒர்க் பண்ணுனேன். நாங்கள் படம். அதுல நான் கோ டைரக்டர். இந்தப் படத்துக்கு டைரக்டர் மகேந்திரன் சார் கதை, வசனம் எழுதினார். அவரோட மகன் ஜான் மகேந்திரன் அசோசியேட் டைரக்டர். டி.என்.பாலுவின் மகன் ராஜேந்திரனும் அசோசியேட் டைரக்டர்.
அது சிவாஜியோடு எனக்கு கிடைச்ச நல்ல அனுபவம்.
அடுத்து ஒரு படம். கேயார் தான் புரொடியூசர். 'சின்ன மருமகள்' படம். நான் டைரக்டர். பெங்களூர்ல சூட்டிங். சிவாஜிக்கு டயலாக் சொல்லிக் கொடுக்க ஆள் இல்ல. வசனகர்த்தா பிரசன்னகுமாரை அனுப்பி வைக்க, அவரு இல்ல நான் துரை படத்துல டிஸ்கசன்ல இருக்கேன்னு சொன்னார். உடனே 'துரையையும் கூட்டிட்டுப் போயிடு. ரூம் போட்டுக் கொடுக்குறேன். காலைல சூட்டிங் போங்க. ஈவினிங் டிஸ்கசன் பண்ணுங்க'ன்னு கேயார் சொல்லிட்டாரு. சரின்னு சூட்டிங் போயிட்டோம்.
அங்கு சிவாஜி 'எதுக்குடா வந்தே நீ?' என கேட்டார். 'இல்லப்பா லொகேஷன் பார்க்க வந்தேன்'னு சொன்னேன். 'சரி. கேமரா மேனை எங்கே? ஆர்ட் டைரக்டர எங்கே?' 'இல்லப்பா... நான் பார்த்தா போதும்...' 'ஓ... அவ்வளவு பெரிய புடுங்கியா ஆயிட்டியா... நீ ஒத்த ஆளாப் பார்த்தா போதுமா?'ன்னு கலாட்டா பண்ணினாரு.
இதையும் படிங்க... எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..
அவரு கூட சேர்ந்து படத்துல திடீர்னு நடிக்க வேண்டியதாயிட்டு. அப்போ ஒரு கன்னடக்காரருக்கு தமிழ் வராதுங்கறதால என்னை நடிக்கச் சொல்லிட்டாங்க. நான் டாக்டரா நடிச்சேன். அப்போ எல்லாரும் சேர்ந்து சிவாஜியோடு போட்டோ எடுத்தோம். நானும் எடுத்தேன். அந்தப் போட்டோ எடுக்கறதுக்கு முன்னாடி தான் சிவாஜி ட்ரீட்மெண்ட் எடுத்து இருந்தாரு. அந்த ஸ்டில்ல நேஷனல் செல்லையாதான் எடுத்தாரு. அவரு சொல்றாரு. 'இந்த ஒரு போட்டால தான் சார் சிவாஜி சிரிச்சிருக்காரு'ன்னு சொன்னார். அது மறக்க முடியாத அனுபவம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.