அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்

by Akhilan |
அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்
X

annathe

Annathe: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகும் போது தங்களுக்கு சொன்ன கதையை படக்குழு இயக்கவில்லை. மொத்தமாக மற்றொரு கதையை தான் தங்களிடம் சொன்னதாக நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைப்பு செய்திருந்தார்.

இதையும் படிங்க:ஜெயிலர் கதைதான் கோட்! யாரெல்லாம் இத கவனிச்சீங்க.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட இயக்குனர்

ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்திய திரைப்படம் அண்ணாத்த. அதிலும் முன்னணி நடிகைகளான குஷ்பு மற்றும் மீனா இருவருக்கும் மிக சாதாரண வேடத்தை கொடுத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை குஷ்பு தெரிவித்திருக்கும் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

annathe

இது குறித்து குஷ்பு கூறும்போது, முதலில் எங்களுக்கு சொல்லப்பட்ட கதைகள் ரஜினி சாருக்கு ஜோடி கிடையாது. அதனால் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம். கீர்த்தி சுரேஷ் தேட அவர் சென்றபோது நானும் மீனாவும் அவர் கூட செல்வது போலவே அமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் சூட்டிங் தொடங்கியதும் ஒரு தலை காதல் இருப்பது போல காட்சி அமைத்தனர். அதிலும் சின்ன நடிகை யாரையாவது சில காட்சிகளுக்கு போடலாம் என்று பேசப்பட்டது. அந்த நடிகையை டாக்டராக இருக்கும் கேரக்டரில் கொண்டுவர யோசித்து இருந்தனர்.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? தயாரிப்பாளர் போட்ட பதிவு.. கலக்கத்தில் மற்ற படங்கள்

ஏனெனில் அப்போது டூயட் சாங் என எதுவும் இல்லை. கடைசியில் திடீரென நயன்தாரா உள்ளே வந்தார். அவருக்கு என தனியாக டூயட் சாங் அமைக்கப்பட்டது. மொத்த திரைப்படமும் அவர் பக்கம் திரும்பியது.

எனக்கும், மீனாவிற்குமான முக்கியத்துவம் படத்தில் இல்லாமல் போனது. சில நேரங்களில் இது போல் நடப்பது சகஜம்தான். ரஜினி சார் உடன் நடிக்கும் அந்த அனுபவமே மிகப்பெரியது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story