உருப்படியா ஒன்னும் இல்ல! - பொன்னியின் செல்வன் படத்தை வெளுத்து வாங்கிய பிரபலம்!..
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. உலகளவில் கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் படமாக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் படமாக்க முடியவில்லை. இதனை தொடர்ந்துதான் மணிரத்னம் பல ஜாம்பவான்களால் செய்யமுடியாத காரியத்தை செய்து முடித்திருக்கிறார்.
அட்டகாசமான டிரைலர்…
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
மேலும் இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் நேற்றைய முன் தினம் வெளியாகியிருந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் டிரைலர் அட்டகாசமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
ஜெயமோகன் உருப்படியாக எதுவும் எழுதவில்லை…
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வசனங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “கல்கியின் பொன்னியின் செல்வனுக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அந்தணன், “இரண்டுக்கும் ஒரு வேறுபாடு கூட கிடையாது. வசனங்களுக்கு கூட ஜெயமோகன் என்று சும்மா பெயர் போட்டிருக்கிறார்களே தவிர, ஒரு உருப்படியான வசனத்தை கூட ஜெயமோகன் எழுதவில்லை. எல்லாமே பொன்னியின் செல்வன் கதையில் கல்கி எழுதிய வசனங்கள்தான் இடம்பெற்றிருந்தன. அதனை அப்படியேத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயமோகன் ஒரு 4 வரி கூட எழுதவில்லை” என கூறியிருக்கிறார்.