தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தான்... பகீர் கிளப்பும் பிரபலம்..!

dhanush nayanthara
தனுஷ் தயாரிச்ச படத்துல நயன்தாரா, விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் நடந்து கொண்ட விதம் தனுஷை சங்கடப்படுத்தி விட்டது. அந்த ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் கொடுத்து விற்கும்போது தான் பிரச்சனை பெரிதானது.
தனுஷிடம் நேர்மையான முறையில் கேட்டு இருக்கலாம். அங்கும் குறுக்கு வழியில போறாங்க. தனுஷோட மேனேஜரைப் பிடித்து நைசாகப் பேசுறாங்க. ஆனால் அது எடுபடல. அப்புறம் உஷாரானதும் நான் தனுஷைப் பார்க்கணும்னு நயன்தாரா மேனேஜரிடம் சொல்றாங்க. அப்புறம் முடியாதுன்னு சொல்லி விடுறாரு தனுஷ். நயன்தாராவை கடைசியா வரச் சொல்லுங்கன்னு தனுஷ் அனுமதிக்கிறாரு.
Also read: Biggboss Tamil 8: ஏன் அவருக்கு கையில்ல?… இந்த கருமத்தை எல்லாம் பாக்க முடியல!
அப்போ நடந்தது தான் ட்விஸ்ட். நான் உங்க ஆபீஸ்சுக்கு வர மாட்டேன். அவரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கன்னு நயன்தாரா சொல்றாரு. உதவி கேட்குறவங்க தான் கொடுப்பவர்கிட்ட போய் நிற்கணும். அப்போ கடையைப் பூட்டினவரு தான் தனுஷ். அதனால அந்த கிளிப்பிங்ஸ பயன்படுத்த முடியாமப் போச்சு. அதனால நெட்பிளிக்ஸ்சும் விலையைக் குறைச்சிட்டாங்க. அதனால நயன்தாரா தனுஷை எந்தளவு பேசணுமோ அப்படி 3 பக்கமா அறிக்கை விட்டுட்டாரு.
3 செகண்ட்டோ, ஒரு செகண்டோ, அரை செகண்டோ அவரோட அனுமதி இல்லாம அவரு பொருளைப் பயன்படுத்தலாமா? அதுல என்ன லாஜிக் இருக்கு? பத்து நாள் கால்ஷீட்டுக்கு பத்து கோடி கேட்குறது சரியா இருக்கும்போது இது சரியில்லாம இருக்குமா? நிச்சயமா அவரு கம்மியா கேட்டுருக்காருன்னு நான் நினைக்கிறேன் என்று அந்தனன் தெரிவித்துள்ளார்.

anthanan
அப்போது ஆங்கர் பிரபுதேவாவும், சிம்புவும் வருத்தப்பட்டாருன்னா நியாயம். தனுஷ் ஏன் அவங்க கல்யாணத்துக்கு வருத்தப்படறாருன்னு கேட்குறாங்க. இதுல மறைக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை. அவரும் ஒரு காலத்துல நயன்தாராவைக் காதலிச்சாரு.
நயன்தாராவும் தனுஷைக் காதலிச்சாங்க. இன்னொன்னு ஐஸ்வர்யாதனுஷ் கோர்ட்டுக்கு வந்து நிற்கிறாங்களே. அதுக்கு ஆரம்ப விதையே நயன்தாரா தான். அதனால தான் தனுஷ் குடும்பத்துலயே புயல் வீசிச்சு. அதனால இந்தக் காதலை ஏற்றுக்கிறதுக்கு பல பேருக்கு மனசில்ல. நயன்தாராவைப் பொருத்தவரைக் 'கடவுள் பாதி, மிருகம் பாதி' கலந்து செய்த கலவை தான்.
Also read: இந்த வயசுல உனக்கு எதுக்கு செல்லம் ஆன்மீகம்?… ரசிகர்களை கலங்கடித்த இளம் நடிகை!
இன்னொரு பக்கம் மனிதாபிமானத்துல சிறந்து விளங்குறாங்க. 'யாரடி நீ மோகினி' படம் ஹிட்டாகும்போது 'உனக்கு என்ன வேணும் கேளு'ன்னு தனுஷ் நயன்தாராவிடம் கேட்கிறார். அதற்கு' நான் கேட்குறதை செய்வீங்களா'ன்னு கேட்கிறார் நயன். 'சரி' என்கிறார் தனுஷ். அப்போ 'இந்தப் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு எல்லாருக்கும் பைக் வாங்கிக் கொடுங்க'ன்னு சொல்றார் நயன்தாரா. அதே மாதிரி அவரும் வாங்கிக் கொடுத்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.