கோட் படத்துல SK, திரிஷா….மிச்சம் மீதி உள்ள சஸ்பென்ஸையும் உடைத்த பிரபலம்

Published on: September 4, 2024
goat
---Advertisement---

கோட் படத்துக்கு புரொமோஷன் இல்லன்னாலும் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கிட்டே இருக்கு. அர்ச்சனா கல்பாத்தி ஒரு பக்கம், வெங்கட்பிரபு ஒரு பக்கம்னு நிறைய பேட்டிகள் கொடுத்து அசத்துறாங்க. இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு பிரபல வலைப்பேச்சு அந்தனனிடம் கேட்டார்கள்.

ஆடியோ லாஞ்ச் படத்துல இல்லை. அது மட்டும் இருந்து இருந்தா புரொமோஷன் வேற லெவல்ல போயிருக்கும். அந்த வெற்றிடத்தைப் பேலன்ஸ் பண்ற வகையில அர்ச்சனாவும், வெங்கட்பிரபுவும் தனது பங்கிற்கு படத்தைப் பற்றி எந்தச் சேனலைத் திறந்தாலும் பேசி அசத்துறாங்க. அந்த வகையில வெங்கட்பிரபுவாவது சினிமாவில் நீண்டகாலம் அனுபவம் உள்ளவர் பேசறாரு. ஆனா அர்ச்சனாவும் பேசுறது பெரிய விஷயம்.

thrisha sk
thrisha sk

படம் பார்த்த ஒருவர் 3 மணி நேரம் போறதே தெரியல. விறுவிறுப்பாக இருக்குன்னு சொல்றாரு. அஜீத் வாய்ஸ் படத்துல இல்லை. அதை யார் கிரியேட் பண்ணினான்னு தெரியல. ஆனா வெங்கட்பிரபுவுக்கு இருவரும் தேவை.

இந்தப் படப்பிடிப்பு நடந்து முடிகிற வரை விஜயே ஜாலியாக இருந்தாராம். ஆக்சுவலா அவர் கொஞ்சம் ரிசர்வ் டைப். ஆனா வெங்கட்பிரபு டீம் அவருக்கு நல்லா ஒரு என்ஜாய்மெண்டக் கொடுத்ததாம். அதனால அவருக்கே வெங்கட்பிரபுவைப் பிடித்து விட்டதாம்.

டோனி படத்துல உறுதியா இல்ல. ஆனா மற்ற பிளேயர்ஸ் வருவாங்க. சிவகார்த்திகேயன், திரிஷா ரெண்டு பேரும் கண்டிப்பா படத்துல இருக்காங்க. கேப்டன் விஜயகாந்த் ஏஐ ல அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வந்துருக்காங்க.

Also read: கோட் படத்தில் இதுதான் விஜயகாந்தின் லுக்கா?!.. கேப்டன் செம க்யூட்டா இருக்காரே!….

கேப்டன் பிரபாகரன் படத்துல வர்ற மாதிரி வாராறாம். விஜய்க்கே அது பிடித்துப் போனதால் தான் வைக்க சம்மதித்தாராம். சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் எல்லா தியேட்டர்லயும் கோட் படம் போட வாய்ப்பு இல்லை.

வாழை படம் நல்லா போய்க்கிட்டு இருக்குன்னு சொன்னார். ஆனா நான் விசாரிக்கிற வரையில கோட் படத்தை ரெண்டு நாள் மட்டும் எல்லா தியேட்டர்லயும் போட்டுட்டு அதுக்கு அப்புறமா வேணா வாழை போடலாம்னு சொன்னாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.