சூரி, விஜய்சேதுபதியை வறுத்தெடுத்த பிரபலம்... இனியாவது அவங்களைப் பார்த்துக் கத்துக்கோங்க...!

by sankaran v |
Soori vjs
X

Soori vjs

ரசிகர்களிடம் நடிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பாடமே எடுத்து விட்டார் வலைப்பேச்சு அந்தனன். வாங்க அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

கமல், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ் இவங்க எல்லாரும் தன்னோட ரசிகர்களைப் பார்த்து என்னைக்காவது 'டேய்'னு கூப்பிட்டுருங்காங்களா? கொட்டுக்காளி படத்து விழாவுல சூரி சொல்றாரு. டேய் டேய்னு. சூரி வீட்டு மாடையா மேய்க்கிறாங்க ரசிகர்கள் எல்லாரும்.

'டேய் டேய்'னு பேசுறதுக்கு ஏன் அனுமதிக்கிறீங்க? சூரிக்காகத் தான உயிரைக் கொடுக்குறான் அவன். இருக்குற வேலையை எல்லாம் போட்டுட்டு கிளம்பி வர்றான்ல மெட்ராசுக்கு. அப்படின்னா அவனை டேய்னு கூப்பிடுவீங்களா? இவராவது பரவாயில்ல. விஜய்சேதுபதியும் அப்படித்தான்.

'டேய்... கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா'ன்னு சொல்வாரு. ரசிகர்கள் கத்தும்போது. அப்போ அவன் உங்களுக்காக வந்தவன். அவனைத் தம்பிகளா கொஞ்சம் அமைதியா இருங்கன்னு சொல்லலாம்ல. டேய் டேய்னு தான் ரசிகர்களைக் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த வெட்கமோ, சொரணையோ துளி கூட இவங்களுக்குக் கிடையாது.

ரஜினி இத்தனை வருஷமா திரை உலகத்துல இருக்காரு. ஒரு நாளாவது டேய் போட்டுக் கூப்பிட்டுருப்பாரா... உங்களை விட 1000 மடங்கு ரசிகர்கள் இருக்காங்க. கமல் சொன்னது கிடையாது. அவங்க ரசிகர்களை ஒரு பக்கம் உயர்த்தி இந்த சமூகத்துல வைக்கணும்னு நினைச்சாரு.

SVJS

SVJS

அவங்களுக்காக இலக்கிய சொற்பொழிவாளர்களையும், மிகப்பெரிய அறிஞர்களையும் அவங்க முன்னாடி பேச வைச்சி இந்தப் புத்தகங்களைப் படிங்கன்னு சொல்லி உங்களை மேலுயர்த்த நினைச்ச மனுஷன். அஜீத், விஜய், தனுஷ் எல்லாம் பேசிருக்காங்களா? உங்களுக்கு மட்டும் எங்கே இருந்து டேய்னு சொல்ற திமிரு வந்தது? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தங்கலான் படம் பார்க்க வந்த ரசிகர்கள் விக்ரம் கெட்டப்பில் கோவணத்துடன் தியேட்டருக்கு வந்து இருந்தார்களாம். அதைப் பார்க்கும் அவர்களது பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? அந்தப் பிள்ளைகளோட நண்பர்கள் 'உங்க அப்பா தியேட்டர் வாசல்ல முண்டக்கட்டையா நிக்காரு'ன்னு கேலி பண்ண மாட்டாங்களான்னு கேள்வி எழுப்பியுள்ளார் வலைப்பேச்சு அந்தனன்.

Next Story