"இளசுகள் தூக்கத்தை கெடுக்கும் அனு இமானுவேல்..!"- பிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?

Anu Emmanuel
இந்திய இளைஞர்களின் உறக்கத்தை கெடுத்து இருக்கும் அனு இமானுவேல் மலையாள திரைப்படமான ஸ்வப்ன சஞ்சரியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தனது அற்புத நடிப்பு திறனால் அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர்.
இப்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் எப்போதும் இவரது உடல் அழகை மெருகேறிய விதத்தில் வைத்திருப்பதில் ரகசியம் என்ன என்று பலரும் கேட்டிருக்கிறார்கள்.

Anu Emmanuel
தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதனை அடுத்து தெலுங்கு பல படங்களில் நடித்து புகழடைந்த இவர் மீண்டும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
இனி இவரது பிட்னஸ் ரகசியம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம் இவர் ஸ்லிம்மாக பார்ப்பதற்கு படுஜோராக இருப்பதற்கு காரணம் தினமும் 4 டம்ளர் வெந்நீர் குடிப்பதை முக்கியமாக கூறுகிறார்.
அதிகாலை நேரத்தில் கட்டாய யோகா பயிற்சியை இவர் மேற்கொள்வதன் மூலம் இவரது உடல் வலிமை பெறுவதோடு மன வலிமையும் ஏற்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

Anu Emmanuel
உணவு விஷயத்தில் அதிக அளவு பல வகைகளையும் வேக வைத்த முட்டையும் ஓட்ஸ் போன்றவற்றை காலை உணவில் எடுத்துக் கொள்கிறார் மதிய உணவில் அதிக அளவு கீரை வகைகள் காய்கறிகள் பயிர் வகைகளை சாப்பிடுவது தான் கட்டழகு மேனியின் ரகசியமாம்.
உடற்பயிற்சியை முக்கியமாக தவறாமல் செய்வதும் இவரது உடல் எடை கூடாமல் ஸ்லிம்மாக இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறுகிறார் மேலும் பல வகையான பயிற்சிகளையும் அனுதினமும் மேற்கொள்கிறார் இரவு நேரங்களில் அதிக அளவு ரொட்டி சப்ஜியை மட்டும் சாப்பிடுகிறார்.
இப்போது செல்லக்குட்டி அனு இமானுவேலின் பிட்னஸ் ரகசியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் முடிந்தால் நீங்களும் இந்த உணவுப் பழக்க வழக்கங்களையும் உடற்பயிற்சியும் மேற்கொண்டு உங்கள் வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்யலாமே.