Connect with us

Cinema News

இளையராஜாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவரு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? வெடித்த பிரபலம்…

Ilayaaraja: இசையமைப்பாளர் இளையராஜாவை பொதுவாக சினிமா உலகம் புகழ் பாடினாலும் அவருக்கு கோபம் அதிகம் வரும். ஆணவம் பிடித்தவர் என்ற எண்ணமே இருக்கிறது. ஆனால் நடிகரும், இயக்குனருமான அனு மோகன் சிலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இளையராஜாவின் இசை அறிவு அவருக்கு கிடைத்த வரம். அவரிடம் பெரிய தப்பான விஷயமே இல்லை. ஆனால் அவரின் தொழிலுக்கு அப்பாற்ப்பட்ட சில விஷயங்கள் வரும் போது அவருக்கு கோபம் தான் வரும். எல்லாருக்குமே அந்த கோபம் வரும் தானே.

இதையும் படிங்க: 28 முறை ரஜினியுடன் மோதிய சத்யராஜ் படங்கள்!. ஜெயிச்சது யாருன்னு வாங்க பார்ப்போம்!..

முதல் முதலாக சினிமாவிற்கு ரெக்கார்டிங் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அவரின் குணம் மாறவே இல்லை. நான், ஆர் சுந்தர்ராஜன், பாக்கியராஜ், பாரதிராஜா நாங்கள் எல்லாம் அவரை பார்க்கப் போகும்போது ரெக்கார்டிங்கில் இருந்தால் அமைதியாக வெளியில் காத்திருப்போம்.

அவர் முடித்துவிட்டு வந்து எங்களிடம் பேசுவது வரை பொறுமையாக இருப்போம். இதனால் அவருக்கு எங்கள் மீது கோபம் வந்ததே இல்லை. அவருக்கு தொழில் பக்தி அதிகம். வேறு நேரத்தில் பசங்களை கூட அவர் கண்டு கொண்டதில்லை. சாப்பிடக்கூட சில நேரம் மறந்து போயிருக்கிறார். அவரோட மனது முழுதும் சினிமாவுக்குள் தான். ஒரே நாளில் நான்கு சாங் வரை ரெக்கார்டிங் முடித்து இருக்கிறார். அது பெரிய விஷயம்.

இதையும் படிங்க: கடைசி வரை நடக்காமல் போன டேனியல் பாலாஜியின் நீண்டகால ஆசை… நடந்து இருந்தா நல்லா இருக்குமே!

இளையராஜா ஸ்டைலே தனி. தொழில் தான் அவருக்கு முக்கியம். வேலையை தொந்தரவு செய்பவர்களை அவருக்கு எப்போதுமே பிடிக்காது. பிரசாத்தில் அவர் ரெக்கார்டிங் நடக்கும் போது பத்து தயாரிப்பாளர்கள் அவரை காண லைனில் நின்ற சம்பவம் எல்லாம் நடந்தது. காசு எல்லாம் அவருக்கு தேவை இல்லை. கதைக்கு தான் அங்கு மரியாதை. அவருக்கு பிடிச்சு இருந்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் செய்வார்.

எனக்கும் இளையராஜாவுக்கும் ஒரு நெருக்கம் இருக்கும். முதல் படத்துக்கு அவரை இசையமைக்க கேட்க போனேன். ஆனால் அப்போ அவர் பிஸியாக இருந்தார். நீ எனக்காக காத்திருக்க வேண்டாம். அமரை(கங்கை அமரன்) வைத்து எடுத்துக்கோ. இரண்டாம் படத்துக்கு செஞ்சி தரேன் எனச் சொல்லி அனுப்பினார்.

அதுப்போலவே இரண்டாம் படத்துக்கு நான் அவரிடம் போய் நின்றேன். இயக்குனரா என்றார். இல்லை நானே இந்த படம் எடுக்கிறேன் என்றேன். சிரித்துக்கொண்டே இதான் முதல் படமே தட்டிப்போச்சோ என்றார். பிரபு நடிப்பில் வெளியான நினைவுச்சின்னம் படத்திற்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானை ஷங்கர் கழட்டிவிட்டதுக்கு காரணம் இதுதானா?!.. என்னப்பா சொல்றீங்க?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top