விஜய்சேதுபதி படம் வேலைக்கு ஆகல!.. டோலிவுட் பக்கம் நைஸாக ஒதுங்கிய மிஸ் இந்தியா!.. யாரு படம்னு பாருங்க!
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து ஹாட்ரிக் அடிக்க நினைத்து சீமராஜா எனும் செம மொக்கை படத்தைக் கொடுக்க இனிமே உங்க சங்காத்தமே வேண்டாம் என சிவகார்த்திகேயன் டாட்டா காட்டி விட்டார்.
அதன் பின்னர் சசி குமாரை வைத்து எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பொன்ராம் விஜய்சேதுபதியை வைத்து வெயிட்டா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட டிஎஸ்பி திரைப்படம் ரசிகர்களை எப்படி வச்சு செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா!.. இந்த டைம்ல இப்படியெல்லாம் நடிக்கணுமா செல்லம்!..
அந்த படத்தில் தான் 2018ல் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வான அனுக்ரீத்தி வாஸ் ஹீரோயினாக அறிமுகமானார். ஆரம்பத்தில், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்து படத்தின் கதையை பார்த்து விட்டு நைஸாக கழண்டு கொண்டது.
ஆனால், விஜய்சேதுபதியும், அனுக்ரீத்தி வாஸும் வசமாக மாட்டிக் கொண்டனர். படத்தில் விஜய்சேதுபதி டீமில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஷிவானி நாராயணனே ஹீரோயின் போல இருந்தார் என்றும் மிஸ் இந்தியா அழகின்னு சொல்லிட்டு இவங்களை காட்டுறீங்களே என அனுக்ரீத்தியை ரசிகர்கள் கலாய்த்தனர்.
இதையும் படிங்க: நம்பியாரை பாராட்டி கடிதம் எழுதிய ரசிகர்! பதிலுக்கு நம்ம வில்லன் நடிகர் எழுதிய கடிதத்தை பாருங்க
இந்நிலையில், கோலிவுட் என்ட்ரி சொதப்பி விட்ட நிலையில், தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி உள்ள டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் இவர் தான் ஹீரோயின். சமீபத்தில், ரவி தேஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.