நம்பியாரை பாராட்டி கடிதம் எழுதிய ரசிகர்! பதிலுக்கு நம்ம வில்லன் நடிகர் என்ன பண்ணார் பாருங்க!..

Actor Nambiar: தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பெற்றவர் நடிகர் எம்.என். நம்பியார். மேடை நாடகங்களில் பல நாடகங்களை அரங்கேற்றிய நம்பியார் தமிழ் திரைப்படங்களில் ஒரு பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தினார்.

அந்த காலங்களில் அவர் போட்டோவை காட்டியே குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய தாய்மார்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். அந்த போட்டோவை பார்த்து பயந்து போய் சாப்பிட்ட குழந்தைகளும் இருந்தனர். அந்த அளவுக்கு வில்லத்தனத்தை தன் முக பாவனைகளிலேயே காட்டியவர் நம்பியார்.

இதையும் படிங்க: கமல் படத்தில் வசமாக மாட்டிக்கொண்ட முழிக்கும் எஸ்.கே.. செம கடுப்பில் முருகதாஸ்!.. நடப்பது இதுதான்!..

எம்ஜிஆர் ரசிகர்கள் நம்பியாரை எம்ஜிஆரின் நிஜ வில்லனாகவே பார்த்தனர். அந்தளவுக்கு எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக வலம் வந்தார். கத்திச்சண்டை , வாள் சண்டை என எம்ஜிஆருடன் சரி மல்லுக்கட்டினார் நம்பியார். அப்படி சண்டை போடும் போது திரைக்கு வெளியில் இருந்து பார்த்த ரசிகர்கள் நம்பியார் மீது கல்லெடுத்து அடித்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

அப்படி ஒரு கொடூரமான வில்லனாக அந்த காலத்தில் பயத்தை காட்டியவர் நம் ஆன்மீக தாத்தா எம்.என். நம்பியார். படத்தில் எப்படி அவரை கொடூரமாக பார்த்தோமோ நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர் எதிரானவர் நம்பியார். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் கடைசி வரை ஒரு அற்புத மனிதராகவே வாழ்ந்தார். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் மேஜர் தாசன் நம்பியாருக்கு அந்த காலத்தில் ஒரு கடிதம் எழுதினாராம்.

இதையும் படிங்க: அவ்ளோ வெறி புஷ்பாவுக்கு!.. இடுப்புல கை வச்சு கடிச்சித் திங்கிற மாதிரி பார்க்கிறாரே ரேஷ்மா!..

அதாவது நம்பியாரின் நடிப்பை பார்த்தும் அவரின் குணத்தை பார்த்தும் ஏராளமான கடிதங்களை எழுத பதிலுக்கு நம்பியார் கடிதமே எழுதாமல் இருந்தாராம். ஆனால் ஒரு நாள் அந்த பத்திரிக்கையாளருக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார் நம்பியார். அதில் ‘ தாமதமாக கடிதம் எழுதுகிறேன். என் படங்களை எந்தளவு பார்த்திருப்பீர்கள் என நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறது.உங்களை போன்ற ரசிகர்கள் இருப்பதால்தான் இந்த சினிமா சீரும் சிறப்புமாக இருக்கிறது. ’

nambi

nambi

‘எனக்கு தெரிந்த வரைக்கும் நான் சுமாராகத்தான் நடிக்கிறேன். சிவாஜி போன்ற நடிகர்கள் இருக்கும் போது அவர்களை மீறி என்னால் எப்படி நடிக்க முடியும்’ என பதில் அளித்திருந்தார்.இதை குறிப்பிட்டு பேசிய சித்ரா லட்சுமணன் அந்த கடிதத்தில் நம்பியாரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது. தாமதமாக எழுதியிருப்பதற்கு மறைமுகமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் நம்பியார்.மேலும் சிவாஜியை எந்தளவு பெருமை படுத்தியிருக்கிறார் என்பதும் அதில் சிறப்பாகவே காட்டப்பட்டிருக்கிறது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: சிக்னல்ல பிச்சை தான் எடுப்பேன்னு சொல்றாங்க!.. அதே சிக்னல்ல இந்த ஆம்புலன்ஸும் வரும்.. பாலா பாலாதான்!

 

Related Articles

Next Story