இவனுங்களை நம்பி ஏமாந்துட்டேன்!.. லோகேஷ் கனகராஜால் கடுப்பானாரா பிரபல இயக்குனர்?!..
ஹாலிவுட்டில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் அனுராக் காஷ்யப். காசியில் பிறந்து வளந்தவர் இவர்.தமிழ் படங்களை உன்னிப்பாக கவனிக்கும் வழக்கத்தை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இயக்குனர் சசிகுமார், ஜெய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சுப்ரமணியபுரம் படத்தை பார்த்துவிட்டு சசிகுமாரை தொலைபேசியில் அழைத்து பாராட்டி வாழ்த்தியவர் இவர்.
ஒருநாள் திடீரென தனது உதவியாளரை அழைத்து சென்னைக்கு டிக்கெட் புக் செய்ய சொல்லியும், இயக்குனர் பாலாவை சந்திக்க நேரம் கேட்குமாறும் சொல்லியிருக்கிறார். அதன்படி பாலாவை சந்தித்து அவரது பூர்வீகம் பற்றி கேட்டிருக்கிறார். "தேனி" மாவட்டம் 'பெரியகுளம்' அருகே உள்ள ஒரு கிராமம் என பதில் சொல்லி விட்டு, ‘ஏன் கேட்கிறீர்கள்?’ என பாலா கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: உங்க அப்பா எங்க? ரோகினியை படுத்தும் விஜயா… முத்துவை நெருங்கும் பிரச்னைகள்!…
அதற்கு ‘நான் காசியில் பிறந்தவன். கங்கை நதியிலே நீரில் மூழ்கி காசுகளை பொறுக்கும் சிறுவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். திரைப்படங்களில் காசியை வேறு யாரும் இவ்வளவு அழகாக காட்டியதில்லை. காட்சியமைப்பை பார்த்து நான் வியந்து போனேன்’ எனவும் சொல்லி அவரை பாராட்டியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜிடம் அவரது படத்தில் தான் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தனது விருப்பத்தை நேரடியாக கூறியதையடுத்து "லியோ" படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டார் அனுராக் காஷ்யப். இவர் வரும் காட்சிகள் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற, தனக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் என நினைத்து வந்த அவரை ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடிக்க வைத்து அதிலும் அவரை சுட்டு கொல்வது போலவும் காட்டி அல்வா கொடுத்தார் லோகேஷ்.
இதையும் படிங்க: அப்ப விரட்டி விட்டாங்க!.. இப்ப கூப்பிடுறாங்க!.. இந்தியன் 2 அனுபவம் பேசும் சமுத்திரக்கனி…
இந்த ஆதங்கம்தானா?.. அல்லது இந்த சம்பவம்தான் அவருக்கு கோபத்தை தூண்டியதா? என தெரியவில்லை. டிவிட்டரில் "இன்றைய இளைஞர்களை நம்பி தனது நேரத்தை வீண்டித்துவிட்டேன்" என பதிவிட்டிருக்கிறார். இளம் இயக்குனர் என குறிப்பிட்டிருப்பதால் அது லோகேஷ் கனகராஜாக இருக்கும் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள்.
அதோடு, இனிமேல் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். என்னை சந்திக்க விரும்புவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் தர வேண்டும் எனவும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவருக்கு எது கோபத்தை ஏற்படுத்தியது என்பது தெரியவில்லை.