வாடகை தாய்க்கு பதிலா.. வாடகை அப்பா.. அனுஷ்காவுக்கு கைகொடுத்ததா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி?..

by Saranya M |   ( Updated:2023-09-08 22:17:47  )
வாடகை தாய்க்கு பதிலா.. வாடகை அப்பா..  அனுஷ்காவுக்கு கைகொடுத்ததா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி?..
X

நயன்தாராவுக்கு போட்டியாக நடிகை அனுஷ்கா ஜவான் திரைப்படம் ரிலீசான அதே நாளில் தனது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தை வெளியிட்டு இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான இந்த படம் அவருக்கு கை கொடுத்ததா ஏமாற்றியதா என்கிற விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.

அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அம்மாவை விட்டு அப்பா பிரிந்து சென்றுவிடுகிறார். இதன் காரணமாக திருமண வாழ்க்கையின் மீது அனுஷ்காவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன் என்கிற முடிவில் உள்ளார்.

இதையும் படிங்க: ஆல் ஏரியாவுல அய்யா கில்லிடா!. 2 நாட்களில் இப்படியொரு வசூலா!.. பாக்ஸ் ஆபிஸ் சரவெடியாய் மாறிய ஜவான்!..

ஆனால் தனது அம்மா இறந்த பின்னர் தனக்கு ஒரு துணை வேண்டுமே என்பதற்காக வாடகை தந்தை மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வருகிறார். அதற்காக ஸ்பெர்ம் டோனரை தானே தேர்வு செய்து கொள்ளும் முடிவுக்கும் வருகிறார்.

ஐடியில் வேலை பார்த்துக் கொண்டு ஸ்டாண்டப் காமெடியனாக வலம் வரும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஹீரோ நவீன் பொலி ஷெட்டியை தனக்கான டோனர் ஆக தேர்வு செய்கிறார் அனுஷ்கா.

இதையும் படிங்க: அந்த எழவே வேண்டாமுன்னு தானே வந்தேன்!.. சாதி, சம்பிரதாயங்களை எதிர்க்கும் சேரன்.. தமிழ்க்குடிமகன் தப்பித்ததா?

ஆனால், அனுஷ்காவை பார்த்தவுடன் அவரை விட ஐந்து வயது குறைவாக இருந்தாலும் அனுஷ்காவை காதலிக்க ஆரம்பிக்கிறார் நவீன் பொலிஷெட்டி. ஆனால் அனுஷ்கா ஒரே கண்டிஷனாக திருமணத்திற்கு நோ சொல்லிவிட்டு ஸ்பெர்ம் டோனர் ஆக மட்டும் அவரை பயன்படுத்திக் கொள்கிறார்.

பின்னர் நவீன் பொலி ஷெட்டியை பிரிந்து செல்லும் அனுஷ்காவை தேடி வரும் ஹீரோ கடைசியில் ஹீரோயினுடன் சேர்ந்தாரா இல்லையா இதுதான் இந்தப் படத்தின் கதை.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல கொஞ்சம் மிஸ் ஆனாலும் சொதப்பி விடும் படத்தை இயக்குனர் மகேஷ் பாபு சரியான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளின் மூலம் ரசிகர்கள் சிரித்து ஜாலியாக பார்க்கும் படமாக கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: துடிக்கும் கரங்கள் விமர்சனம்: கரங்கள் துடிக்குதோ இல்லையோ!.. கால்கள் துடிக்குது தியேட்டரை விட்டு ஓட!..

ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படமும் இதே போலவே கையாளப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் யாருக்கு என்றே தெரியாமல் ஹரிஷ் கல்யாண் ஸ்பெர்ம் டோனராக நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் அனுஷ்காவுக்கு மட்டுமே ஸ்பேர்ம் டோனர் ஆக மாறும் ஹீரோ கடைசியில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்கிற ட்விஸ்ட்டுடன் முடித்துள்ளனர்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு வெளிநாடு காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாகவும் கண்களுக்கு இதமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும்.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி - சம்திங் மிஸ்ஸிங்

ரேட்டிங்: 3/5.

Next Story