Connect with us

latest news

துடிக்கும் கரங்கள் விமர்சனம்: கரங்கள் துடிக்குதோ இல்லையோ!.. கால்கள் துடிக்குது தியேட்டரை விட்டு ஓட!..

இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் விமல், சதீஷ், மிஷா நரங் நடிப்பில் உருவாகியுள்ள துடிக்கும் கரங்கள் திரைப்படம் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியான பல சின்ன திரைப்படங்களின் ரிலீசை கூட ரசிகர்களுக்கு தெரியாத வகையில் க்ளீன் ஸ்வைப் செய்துள்ளது. அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படமே இந்த வாரம் வந்ததா வரவில்லையா என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கையில் தைரியமா ஷாருக்கான் எதிர்க்க நான் வரேன் என விமல் தனது துடிக்கும் கரங்கள் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கமல் நடிப்பே எனக்கு பிடிக்காது!.. வடிவேலு அதை விட பயங்கரமான நடிகர்!.. மாரிமுத்துவின் மறக்க முடியாத பேச்சு!..

அட்லி இயக்கிய ஜவான் படத்தில் ஏகப்பட்ட படங்களின் கதைகள் இருந்தன. ஆனால் இந்தப் படத்தில் என்ன கதை என்றே கடைசி வரை ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாமல் மண்டை குழம்பிப் போய் தியேட்டரை விட்டு ஓடி வந்ததுதான் மிச்சம் என்கிற நிலை உருவாகியுள்ளது.

படத்தின் ஆரம்பக் காட்சியில் காணாமல் போன தனது மகனை தேடி சென்னைக்கு வருகிறார் சங்கிலி முருகன் அங்கிருந்து கட் செய்தால் ஐஜியின் மகன் ஒருவன் மர்மமான முறையில் காரில் இறந்து கிடக்கிறார்.

இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..

அந்தக் கொலையை தற்கொலை என மறைத்துவிட்டு மறைமுகமாக குற்றவாளிகளை தேடுவதற்காக ஐஜி தரப்பு போலீஸ் அதிகாரியான சௌந்தர்ராஜனிடம் அந்த வழக்கை ஒப்படைக்கிறது.

பரவாயில்லையே விமல் படம் ஆரம்பத்திலேயே விறுவிறுப்பாக இருக்கிறது என நினைத்து சந்தோஷப்படுவதற்குள் ஹீரோவை காட்டுகிறேன் ஹீரோவின் நண்பன் காமெடியனை காட்டுகிறேன் என இருவரும் சேர்ந்து ஒரு மொக்க யூடியூப் சேனலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என இயக்குனர் மீண்டும் பழைய பட பாணிக்கு டிராவல் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க: செல்வராகவனை சேமியா உப்புமாவா ஆக்கிட்டாங்களே!.. இது யாரு செஞ்ச வேலை தெரியுமா!..

அத்துடன் நிறுத்தவில்லை, ஹீரோயினை காட்ட வேண்டும் ஹீரோயினை பின்தொடர்ந்து ஸ்டாக் செய்து ஹீரோ காதலிக்கும் கொடூரமான காட்சிகளையும் காட்டியே தீருவேன் என ஏற்கனவே பார்த்து சலித்துப்போன விமல் பட பாணியிலேயே இந்த படத்தையும் கொடுத்திருக்கிறார்.

நண்பனாக நடித்துள்ள சதீஷ் தன்னால் முடிந்தவரை டார்ச்சர் செய்யும் காமெடிகளை கொடுத்து ஐயோ ஆள விடுப்பா சாமி என ரசிகர்களை தியேட்டரை விட்டு ஓடுவதற்கான அனைத்து வழிகளையும் செய்துள்ளார்.

இதையும் படிங்க: தனி ஒருவன்2 படத்திற்கு வில்லனாக போகும் மாஸ் பாலிவுட் ஹீரோ..வேற லெவல்ல யோசிக்கும் படக்குழு..

காணாமல் போன மகனை தேடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியராக நடித்துள்ள சங்கிலி முருகன் இந்த யூடியூப் சேனலை நடத்தி வரும் ஹீரோ விமலிடம் உதவி கேட்க சங்கிலி முருகனின் மகனை கண்டுபிடிக்க முயற்சி செய்யும்போது கொல்லப்பட்ட ஐஜி மகனுக்கும் காணாமல் போன சங்கிலி முருகன் மகனுக்கும் என்ன சம்பந்தம் என்கிற ட்விஸ்டை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளுடன் வெளிவந்துள்ள படம் தான் துடிக்கும் கரங்கள்.

விலங்கு வெப் சீரிஸ் க்கு பிறகு நடிகர் விமல் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு குலசாமி படத்தை தொடர்ந்து இந்த துடிக்கும் கரங்கள் படமும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

துடிக்கும் கரங்கள்: துடிப்பில்லா கதை

ரேட்டிங்: 2/5.

Continue Reading

More in latest news

To Top