அமீரையும் தாண்டி ‘வாடிவாசலில்’ சூர்யாவுக்கு இருக்கும் பிரச்சினை! இதுதான் மேட்டரா?
Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது கங்குவா திரைப்படத்தில் பயங்கர பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் சூர்யா. அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படம் வருமா வராதா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக அமீர் நடிப்பர் என ஆணித்தரமாக இருக்கிறார் வெற்றிமாறன். இன்னொரு பக்கம் சூர்யாவின் குடும்பத்துக்கும் அமீருக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: இருவேறு துறைகளில் 60 ஆண்டுகளை கடந்த ஜாம்பவான்கள்.. கமலை இந்த அளவுக்கு யாரும் பாராட்டி இருக்கவே முடியாது
இந்த நிலையில் ஒரே படத்தில் இருவரும் எப்படி சேர்ந்து நடிப்பார்கள் என்ற கேள்விதான் இருக்கிறது. நான் இந்தப் படத்தில் இருந்து விலகிவிடுகிறேன் என்று சூர்யா சொன்னதாக சில செய்திகள் வெளியானது. ஆனால் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பதும் உறுதி.
அதே வேளையில் அமீர் நடிப்பதும் உறுதியாகிவிட்டதாம். ஆனாலும் ஒரு சின்ன சிக்கல் சூர்யாவுக்கு இருக்கிறது. ஏற்கனவே வெளியான அறிவிப்பின் படி வாடிவாசல் திரைப்படம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படுவதாக இருந்தது.
இதையும் படிங்க: ரஜினியிடம் சிவாஜி கேட்ட அந்த கேள்வி!.. ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!.. நடந்தது இதுதான்!..
ஆனால் சூர்யா ஏதோ ஒரு ஆங்கில படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர்கள் ஒரு கண்டீசனையும் சூர்யாவுக்கு சொல்லியிருக்கிறார்கள். அதாவது அந்த ஆங்கிலப் படத்தில் நடித்து முடிக்கிற வரைக்கும் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகக் கூடாது என்ற கண்டீசனை போட்டிருக்கிறார்கள்.
அதனால் சூர்யா வெற்றிமாறனிடம் அதற்கு முன்னதாகவே வாடிவாசலை ஆரம்பித்துவிட்டால் அதன் பின் கிடைக்கிற நேரத்தில் வந்து நடித்துக் கொடுத்து விடுவேன் என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: க்யூட்னஸ் ஓவர்லோட்!.. இதயத்தை திருடும் இந்துஜா!.. வைரல் புகைப்படங்கள்…