இருவேறு துறைகளில் 60 ஆண்டுகளை கடந்த ஜாம்பவான்கள்.. கமலை இந்த அளவுக்கு யாரும் பாராட்டி இருக்கவே முடியாது

உலகநாயகன் கமல் திரையுலகில் பல்துறை வித்தகர் என்றால் அது மிகையாகாது. 60 ஆண்டுகளையும் கடந்து சினிமா உலகில் சாதித்து வருகிறார். இவரைப் பாராட்டாத கலைஞர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஒரு கலைஞர் தான் இவர்.

இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர் உங்கள் பி.ஹெச்.அப்துல் ஹமீத் என இவர் வெண்கலக்குரலில் ஒலிப்பதை 80ஸ் குட்டீஸ்கள் ரொம்பவே ரசித்துக் கேட்டிருப்போம். அவரே ஒருமுறை கமலை வியந்து பாராட்டியுள்ளார்.

இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் வானொலி அலைகளில் வழிப்போக்கன் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல் தான் நூலை வெளியிடுகிறார். தொடர்ந்து அப்துல் ஹமீத் என்ன பேசினார்னு பார்க்கலாமா...

சில பொருள்களையும், சில காட்சிகளையும் ஏன் மனிதர்களையும் கூட தூரத்தில் வைத்து ரசிப்பது தான் சுகம். நெருங்கிவிட்டால் பெரும்பாலும் ஏமாற்றமாகி விடும். தூரத்தில் இருந்து பார்த்த பரவசம் நெருங்கி விட்டால் ஏமாற்றமாகி விடும். அது கானல் நீராக மாறிவிடும். ஆனால் நெருங்கிய பிறகும் என்னை வியந்து ரசிக்க வைத்த மாமனிதர் கமல்ஹாசன்.

அவர் 5 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். நான் 11 வயதில் வானொலித் துறையில் காலடி எடுத்து வைத்தேன். இருவரும் இருவேறு துறையில் 60 ஆண்டுகளைக் கடந்து விட்டோம் என்றார்.

VOVP

VOVP

வானலைகளில் ஒரு வழிப்போக்கன் என்ற ஒரு நூல் ஒரு சுயபுராணம் போல இல்லாமல் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் அப்துல் ஹமீத் எழுதியுள்ளாராம். வானொலிகளின் வரலாறு, முன்னோடிகளின் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் விதத்தில் எழுதியுள்ளாராம்.

மேலும் அப்துல் ஹமீத் கூறுகையில், இங்கிலாந்தில் மார்கோனி முதன்முதலில் ஒலிபரப்பை நடத்திய மார்கோனி ஹட் என்ற கலையகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட நாள் இருந்தது. லண்டனில் வாழும் ஜேவாள தேவன் என்பவர் எனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் வானொலி நிலையத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார் என்றதும் எனக்கு கதவுகள் திறந்தன.

மார்கோனி பயன்படுத்திய முதலாவது டிரான்ஸ்மீட்டா், ஒலிவாங்கி, மைக் என அத்தனையையும் தொட்டுப் பார்க்கக்கூடிய பாக்கியம் கிடைத்தது. அங்குதான் இப்படி ஒரு நூலை எழுத வேண்டும் என்பதற்கான உந்துசக்தி எனக்குள் விதைக்கப்பட்டது என்கிறார்.

 

Related Articles

Next Story