ஹீரோக்களை தாண்டி பிஸியாக இருக்கும் நடிகர்கள்! எந்தப் பக்கம் திரும்பினாலும் இவங்கதான்பா
Tamil Actors: சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு படத்திற்கு ஹீரோ ஹீரோயின் இவர்கள்தான் முக்கியம் என்ற நிலைமை அப்போதிலிருந்து இருந்து வந்தது. ஆனால் அந்த நிலைமையை முற்றிலும் இந்த கால சினிமா மாற்றி இருக்கிறது. ஹீரோ ஹீரோயினை தாண்டி ஒரு படத்திற்கு கதை மிகவும் முக்கியம் என்று மாறிவிட்டது. அதனால் அந்த கதைக்கு ஏற்றவாறு நடிக்க கூடிய நடிகர்கள் தான் இப்போது ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றனர்.
அந்த வகையில் ஹீரோக்களையும் தாண்டி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பெயர் வாங்கிய நடிகர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். தன்னுடைய கதாபாத்திரத்தினை மிகவும் அழகாக பிரதிபலித்து இப்பொழுது ஹீரோக்களை விட அவர்களின் கால்ஷீட் பிரச்சினை தான் சினிமாவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய வாலியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியம்தான்
எந்த படத்தை பார்த்தாலும் இவர்கள் இல்லாத ஒரு படமே இல்லை என்ற நிலைமைக்கு அந்த ஹீரோக்கள் இப்போது வளர்ந்து நிற்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் யார் யார் என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம். முதலாவதாக சமுத்திரக்கனி. ஒரு இயக்குனராக தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்த சமுத்திரக்கனி தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கி அதன் மூலம் ஒரு சிறந்த இயக்குனர் என்ற பெயரை வாங்கினார்.
அதன் பிறகு நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் என எல்லா மொழிகளிலும் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனாலயே சிறு படங்கள் முதல் பெரிய ஹீரோக்கள் படங்கள் வரை எந்த படங்களை பார்த்தாலும் சமுத்திரகனி இல்லாத ஒரு படத்தை நம்மால் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு இவருடைய கால் சீட் நிரம்பி வழிகிறது.
இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..
அடுத்ததாக எஸ் ஜே சூர்யா. இவருமே இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர். ஆரம்பத்திலேயே விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆசையால் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் இவரை ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டி அதிலிருந்து தொடர்ந்து எல்லா படங்களிலும் வில்லனாகவே நடித்து இன்று சூப்பர் ஸ்டாருக்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக எஸ் ஜே சூர்யா மாறி இருக்கிறார். இவரும் தூக்கம் இல்லாமல் எல்லா படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…
அடுத்ததாக யோகி பாபு. ஆரம்பத்தில் வில்லன் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் இப்போது ஹீரோ என எல்லா பரிணாமங்களிலும் யோகி பாபு ஜொலித்து வருகிறார். இவருமே சிறு சிறு படங்கள் முதல் பெரிய ஹீரோக்கள் படங்கள் வரை எல்லா படங்களிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். இவரையும் எந்த படத்திலும் பார்க்க முடியும்.