More
Categories: Cinema News latest news

ரீ ரிலீஸில் அள்ளிய வசூல்.. ஆனாலும் யாரையும் சந்திக்காத கில்லி பட இயக்குனர்!.. இதுதான் காரணமா?!..

Gilli Movie: சமீபகாலமாக மலையாள சினிமாக்கள் தமிழ் ரசிகர்களை ஆக்கிரமித்து வருகின்றனல். மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, சமீபத்தில் வெளியான ஆவேசம் போன்ற படங்கள் மலையாள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அதனால் மலையாள படங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இங்கு கோலிவுட்டில் கண்டெண்டுக்கு பஞ்சம் இருக்கத்தான் செய்கின்றது.

அதன் காரணமாகவே நன்கு ஓடி வெற்றிப் பெற்ற படங்களை ரி ரிலீஸ் செய்து அதன் மூலம் லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தை மறு வெளியீடு செய்திருக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இவர்களுடன் சேர்ந்து பிரகாஷ்ராஜ், ஆஷிஸ் வித்யார்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: ராதிகா மீது பயங்கர சந்தேகத்தில் இருக்கும் குடும்பம்… உளறி கொட்டிய கோபி…

2004 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரி ரிலீஸ் செய்திருந்த நிலையில் உலக அளவில் முதல் நாள் வசூலில் சுமார் 10.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 4 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.ஆக மொத்தம் இதுவரைக்கும் மொத்த வசூலாக 17 கோடியில் இருந்து 18 கோடி வரை இந்தப் படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கில்லி படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் ரி ரிலீஸுக்கு பிறகு அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் இதுவரைக்கும் படத்தின் இயக்குனரான தரணி மட்டும் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இவ்ளோ சாதனை படைத்த பிறகும் ஏன் தரணியை பேட்டியில் காண முடியவில்லை என்று ரசிகர் ஒருவர் சித்ரா லட்சும்ணனிடம் கேட்டார்.

இதையும் படிங்க: நான் ஹீரோயினை விட அழகா இருக்கேன்னு என்ன பண்ணாங்க தெரியுமா? வேதனையில் நடிகை

அதற்கு பதிலளித்த அவர் ‘தரணியை வெளியே பார்க்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அவருடைய நிலைமைதான். எத்தனையோ பல முன்னனி நடிகர்களை வளர்த்துவிட்டவர் தரணி. ஆனால் அவருக்கான வாய்ப்பு இப்போது இருக்கிறதா என்றால் இல்லை. விஜயின் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் இந்தளவு வெற்றி பெற்றிருக்குமா என தெரியவில்லை. ஆனால் கில்லி படம் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தரணியின் கடின உழைப்புதான். இதையெல்லாம் நினைத்துதான் தரணி பேட்டி கொடுக்க முன்வந்திருக்க மாட்டார்’ என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts