சிவகார்த்திகேயனை வேறலெவலில் காட்டுறேன்!.. செமயா ஸ்கெட்ச் போடும் ஏ.ஆர்.முருகதாஸ்...
சிவகார்த்திகேயனுக்கு என ஒரு தனி ஸ்டைல் உண்டு. இதுவரை நடித்த எல்லா படங்களிலிலும் அவர் ஒரே மாதிரிதான் நடித்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் நடித்த டாக்டர் படத்தில் மட்டுமே கொஞ்சம் அதிகம் பேசாமல், அடக்கி வாசித்திருப்பார். மற்றபடி பக்கம் பக்கமாக வசனம் பேசி நடிப்பது அவரின் வழக்கம்.
அதற்கு காரணம் டிவியில் ஆங்கராக வேலை பார்த்தவர் அவர். அதற்கு முன்பு பல இசை நிகழ்ச்சிகளிலும் மிமிக்ரி செய்து வந்தார். ஆங்கராக இருந்தபோது சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. மெரினா படத்தில் அறிமுகமான அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றி அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.
இதையும் படிங்க: அடி மேல் அடி!. ரஜினி படத்தால் வந்த பிரச்சனை!… விடாமுயற்சிக்கு இப்படி ஒரு நிலைமையா?..
குறுகிய காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்தார். ஒருகட்டத்தில் சொந்தமாக படங்களை தயாரிக்க துவங்கி அதனால் பல கோடி கடனாளியும் ஆனார். இதனால், கடந்த சில வருடங்களாகவே அவரின் படங்கள் ரிலீஸாகும் போது கடன் கொடுத்தவர்கள் அவரின் கழுத்தை பிடித்தார்கள்.
ஒருவழியாக அயலான் படத்தோடு அவரின் எல்லா கடனும் தீர்ந்து போய்விட்டது. இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கமாண்டோ வேடத்தில் கலக்கி இருக்கிறாராம். இந்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: தமிழ் சினிமா உலகில் கதைக்கு பஞ்சமா?… வழிகாட்டுகிறது மஞ்சும்மெல் பாய்ஸ்!… பிரபலம் சொல்வதைக் கேளுங்க…
இந்த படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க விருக்கிறார். தான் இயக்கும் படங்களில் கதாநாயகர்களை வேறுமாதிரி காட்டுவது முருகதாஸின் வழக்கம். சூர்யாவுக்கு கஜினி, ரமணாவில் விஜயகாந்த், துப்பாக்கியில் விஜய் என வெரைட்டி காட்டியவர்.
இந்நிலையில், இதுவரை பார்த்த சிவகார்த்திகேயனாக இல்லாமல் பேசும் ஸ்டைல், உடல் மொழி, நடிப்பு என எல்லாவற்றிலும் அவரை வித்தியாசமாக காட்ட திட்டமிட்டிருக்கிறார் முருகதாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் எப்படி நடிக்க வேண்டும் என சொல்வதற்கே ஒரு பயிற்சியாளர் எப்போதும் அவருடன் இருக்கிறாராம்.