ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம்!.. ஆனா கையேந்தி பவன் சாப்பாடு!.. ஏ.ஆர்.முருகதாஸ் பட்டபாடு!...

by சிவா |
a.r.murugadass
X

தமிழ் சினிமாவில் நடிகரோ, இயக்குனரோ.. அவர்கள் பல கோடிகள் சம்பளமாக வாங்கும் நிலைக்கு வந்தபின் அவர்களை பார்த்து பலரும் பெருமூச்சி விடுவார்கள். ரசிகர்கள் உட்பட பலரும் அவர்களை பார்த்து பொறாமைப்படுவார்கள். ஆனால், அதை அடைவதற்கு அவர்கள் பட்டபாடு பற்றி யாரும் பேசமாட்டார்கள்.

இன்று நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டியில் கலந்து கொள்ளும் சில திரைப்பிரபலங்கள் ஆரம்ப கட்டத்தில் சாப்பிட கூட வழியில்லாமல் இருந்தவர்களாக இருப்பார்கள். பசியையும், வறுமையையும் சந்தித்து அதை கடந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இது பலருக்கும் தெரியாது. அவர்களின் இப்போதைய நிலையை மட்டுமே பார்ப்பார்கள்.

இதையும் படிங்க: குட்டி ரஜினியாக கலக்கியவரும்.. தவக்களையும்!.. அவர்களுக்கு என்னாச்சி தெரியுமா?..

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படவே வெற்றி. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன்பின் விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார் முருகதாஸ். இதுதான் முருகதாஸ் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை காட்டியது.

அதன்பின் கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடித்து ஆடினார் முருகதாஸ். கஜினி படத்தை பாலிவுட்டுக்கு போய் சல்மான் கானை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். ரஜினியை வைத்து முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் சரியாக போகவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இதையும் படிங்க: லதா-ரஜினிகாந்த் விவகாரத்து… வெடித்த சர்ச்சை… கோபத்தில் ரசிகர்கள்… என்ன நடந்தது?

இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். தீனா படத்திற்கு பின் ரமணா படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் முருகதாஸுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அவருக்கு உணவு எல்லாமே அங்கிருந்தே கொடுக்கப்பட்டது.

அப்போது ஒரு படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் சிக்கிய ரவிச்சந்திரன் ஹோட்டலில் இருந்து முருகதாஸுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டாராம். எனவே, தனது உதவியாளரை வெளியே அனுப்பி கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி வர சொல்லி சாப்பிட்டிருக்கிறார் முருகதாஸ்.

Next Story