Connect with us

Cinema History

லதா-ரஜினிகாந்த் விவகாரத்து… வெடித்த சர்ச்சை… கோபத்தில் ரசிகர்கள்… என்ன நடந்தது?

Rajinikanth-latha: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷும் விவகாரத்து செய்தி காரசாரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினி ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். அந்த சமயத்தில் தன்னுடைய போயஸ் தோட்ட வீட்டை தந்துவிடும் எண்ணத்தில் இருந்தார். இது கணவன், மனைவிக்கு  இடையே பிரச்சனையை உருவாக்கியது. சாதாரண விஷயம் என்றாலும் சூப்பர் ஸ்டார் வீட்டு பிரச்சனை என்பதால் அப்போதைய ஊடகம் ரஜினிக்கு விவகாரத்து என்ற செய்தியை கசிய விட்டது.

இதையும் படிங்க: விஜயின் சாய்பாபா தரிசனம்! தாய் ஷோபாவுக்காக கட்டிய கோயிலா அது? வெளியான ஷாக்கிங் தகவல்

இந்த செய்தி பரவுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கே பாலச்சந்தரை வளசரவாக்கத்தில் உள்ள கே.ஆர்.விஜயா தோட்டத்தில், ‘சிந்து பைரவி’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து இருக்கிறார். ஸ்ரீ ராகவேந்திரா படப்பிடிப்பிற்காக வீட்டிற்கு வராமல் மனைவி பிள்ளைகளை பார்க்காமல் இருக்கிறார். அவருக்கு அறிவுரை சொல்லி வீட்டிற்கு வரும்படி கூறுங்கள் என லதா ரஜினிகாந்த் கே.பாலச்சந்தரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த நாட்களில் இருந்து தான் விவகாரத்து பிரச்சினை பெரிதாக வெடித்தது.

ரஜினியின் ஓவர் ஆன்மீகம் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கியது. திரையுலக நட்சத்திரங்கள் கூட தாங்கள் முன்னிருந்து பிரச்சினையை தீர்த்து வைப்பதாக பேச தொடங்கினர். ரசிகர்கள் ரஜினிக்கு ரத்த கடிதம் எழுதும் நிலைக்கு போனது. நீங்கள் விவகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் முன் பிணமாக கிடப்போம் எனக் கூட மிரட்டினர்.

இதையும் படிங்க: இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!

சிவகாசியிலுள்ள ரஜினியின் மன்றங்கள் இணைந்து, ‘தீக்குளிப்போம்’ என்று எச்சரிக்கையிட்டு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் இணைந்து ரஜினி வீட்டில் முன் நின்று ஆர்ப்பரிக்க தொடங்கினர். ரஜினி லதா ஒன்று பட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதெல்லாம் கண்டு ரஜினிகாந்த் திகைத்தார். நீங்கள் நினைப்பது போல இங்கு எதுவும் இல்லை. நாங்கள் எப்போதும் போல ஒன்றாக தான் இருக்கிறோம் என அவர் நம்பிக்கை கொடுத்த பிறகு ரசிகர்கள் கூட்டம் அங்கிருந்து பிரிந்து சென்றனர். அதைத்தொடர்ந்தே ஊடகங்கள் விவகாரத்து என்பது பொய்யான செய்தி என வெளியிட்டு மற்ற ரசிகர்களுக்கும் நிம்மதியை கொடுத்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top