ஆடத் தெரியாதவ மேடை கோணல்ன்னு சொன்னாளாம்!.. ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த டபுள் மோசடி!..

by Saranya M |   ( Updated:2023-09-12 20:22:21  )
ஆடத் தெரியாதவ மேடை கோணல்ன்னு சொன்னாளாம்!.. ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த டபுள் மோசடி!..
X

ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் 46,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக ரகுமான் பேட்டியில் கூறிய நிலையில் வெறும் 35 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் விற்பனை செய்யப்பட்டன என நிகழ்ச்சியை நடத்திய ஏ சி டி சி ஈவென்ட் நிர்வாகத்தினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை காண கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூருக்கு படையெடுத்து வந்தனர்.

இதையும் படிங்க: ரஜினி, விஜய், அஜித் கிட்ட இல்லாத பணமா!.. மக்கள் கிட்ட இன்னும் எவ்ளோதான் சுரண்டுவீங்க!.. நியாயமா விஷால்?..

ஒரிஜினல் டிக்கெட்டுகளை வைத்திருந்த நபர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத அவலம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே பெருங்கூட்டம் எப்படி நிகழ்ச்சிக்கு வெகு சீக்கிரமாக வந்து அமர்ந்து கண்டு களித்தது என்கிற கேள்வியை டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளர் எழுப்ப, அதற்கு பதிலளித்த அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் 35,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும், பலர் போலி கியூ ஆர் கோடுகளை பயன்படுத்தி டிக்கெட்டுகளை அச்சிட்டு கொண்டு உள்ளே நுழைந்தது தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்றார்.

ஐடி மக்களை டார்கெட் செய்து ஓஎம்ஆர்-ல் இசை நிகழ்ச்சியை நடத்திய நிலையில் நூதன மோசடி நடைபெற்றதா என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் போலி டிக்கெட்டுகள் என்பதை கூட கண்டுபிடிக்காமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எப்படி அனைவரையும் உள்ளே அனுமதித்தனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் தெறிக்குது.. வார நாட்களிலும் குறையாத கூட்டம்!.. ஜவான் 5ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

மேலும் காவல்துறையிடம் வெறும் 25,000 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு அனுமதி பெறப்பட்டதாகவும் கூடுதலாக சுமார் 20000 பேருக்கு அனுமதி வாங்காதது தான் பிரச்சனைக்கு காரணம் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டிவி விவாத நிகழ்ச்சியில் உளறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ ஆர் ரகுமான் ஒட்டுமொத்தமாக 46,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 35,000 டிக்கெட்டுகள் மற்றும் 5000 கூப்பன்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஏ ஆர் ரகுமான் சொல்லும் கணக்கிற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லும் கணக்கிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பது பெரிய மோசடியாக பார்க்கப்படுகிறது என நெறியாளர் விளாசிய வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.

இதில், சென்னையில் உள்கட்டமைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்பு கேட்காமல் நானே பலி ஆடு என பூசி மெழுக பார்ப்பது எல்லாம் மோசடியை மறைக்கும் செயல் என்றே ப்ளூ சட்டை மாறன் விளாசி உள்ளார்.

Next Story