Connect with us

Cinema News

பாக்ஸ் ஆபிஸ் தெறிக்குது.. வார நாட்களிலும் குறையாத கூட்டம்!.. ஜவான் 5ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு போட்டி ஷாருக் கான் தான் என்பதை பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் கிங் கான்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

இதையும் படிங்க: டப்பிங் பேசும் போதே உயிரிழந்த மாரிமுத்து!.. இப்போ யாரு தெரியுமா ஆதி குணசேகரனுக்கு டப்பிங் பேசுறது!..

இந்த ஆண்டு இந்திய அளவில் வெளியான வேறு எந்த ஒரு படமும் அந்த வசூலை நெருங்க முடியாத நிலையில் தமிழில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டிய நிலையில் ஓடிடிக்கு ஓடி வந்துவிட்டது.

ஆனால், என்னோட வசூல் ரெக்கார்டை நானே முறியடிக்கிறேன் பாருங்க என பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வெறும் ஐந்து நாட்களில் 574 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் ஈட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு வெண்ணெய்!.. விஜய்க்கு மட்டும் சுண்ணாம்பா.. கத்தரி போடும் சென்சார்.. லியோ தலை தப்புமா?..

கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாய் வரைதான் அதிகாரப்பூர்வ வசூலாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், எண்ணி 5 நாட்களிலேயே 574 கோடி இமாலய வசூல் சாதனையை ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

இரண்டாம் வாரம் முடிவில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாயை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

இதையும் படிங்க: 39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!

பொதுவாக திங்கட்கிழமை ஆனால் எந்த ஒரு முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் வசூல் பெருமளவில் குறைந்துவிடும். ஆனால் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 54 கோடி ரூபாய் வரை திங்கள் கிழமையான நேற்று வசூல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை மேலும், இந்த வார இறுதி நாட்கள் என ஜவான் படம் பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்த ஏகப்பட்ட சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மாறியுள்ள நிலையில் கூடிய சீக்கிரமே மிகப்பெரிய பரிசுகள் காத்திருக்கு என்றும் சம்பளத்தை மின்னல் வேகத்தில் உயர்த்தப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top