இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரிக்கு ஆசையுடன் சென்ற அவரது ரசிகர்கள் பல ஆயிரத்துக்கு டிக்கெட்டுகளை வாங்கியிருந்த நிலையில், நிகழ்ச்சி நடக்கும் ஏரியாவுக்குள்ளே செல்ல முடியாமலும், சென்றவர்கள் நிற்க கூட முடியாமல், ஒருத்தர் மேல் ஒருத்தர் மோதிக்கொண்டு அவதிப்பட்ட வேதனைகளை சமூக வலைதளங்களில் கோபத்துடன் கொப்பளித்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் காசுக்காக பிச்சை எடுக்கிறார் என்றும், வெளியே மக்கள் படும் அவஸ்த்தை கூட தெரியாமல் உள்ளே பாடிட்டு இருக்கார் என்றும் பிளாட்டினம், கோல்ட் பாஸ் வாங்கிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சில்வர் பாஸ் ரசிகர்கள் எல்லாம் என்ன ஆகியிருப்பாங்க என ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கச்சேரிக்கு கடும் போக்குவரத்து நெரிசலையும் தாண்டி சென்ற பின்னரும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத விரக்தியால் ரசிகர்கள் அசிங்க அசிங்கமாக திட்டி வரும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஏற்பாடு செய்யத்தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் எல்லாம் எதுக்கு கச்சேரி நடத்துறாரு!.. மறக்கவே மறக்காது நெஞ்சம்!..
வொர்ஸ்ட், வொர்ஸ்ட் ரொம்ப வொர்ஸ்ட் இப்படியொரு இசை கச்சேரி நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றும் மறக்குமா நெஞ்சம் என சரியாத்தான் பெயர் வைத்திருக்கிறார் ரஹ்மான்.
ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கலை சார் 20 ஆயிரம் 30 ஆயிரம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியிருக்கோம். எங்களையே உள்ளே அலோ பண்ணலான்னா என்ன சார் நிகழ்ச்சி நடத்துறான் என ஆவேசப்பட்டு திட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் சோலியை 4 நாளில் முடித்து விட்ட ஷாருக்கான்!.. குஷியில் விஜய் ரசிகர்கள்!.. ஜவான் வசூல் இதோ!
ரசிகர்களுக்கு சரியான ஸ்க்ரீன் மற்றும் ஆடியோ ஸ்பீக்கர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்றும் ரஹ்மான் ரசிகர்கள் என சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாகவும் மனவேதனையை கொட்டித் தீர்த்துள்ளனர்.
சிலர் குழந்தைகளை தொலைத்து விட்டு தேடியதாகவும், சில பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டதாகவும் ஒரு பெற்றோர் என் பையனை கொன்னே போட்டுருப்பாங்க இதுக்கெல்லாம் ஏ.ஆர். ரஹ்மான் தான் பதில் சொல்லணும் என புலம்பித் தீர்த்துள்ள காட்சிகள் குவிந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை மெளனம் காப்பது ஏன் என்கிற கேள்வியைத்தான் பலரும் எழுப்பி வருகின்றனர்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…