சன் டிவி செஞ்ச வேலை!.. ராயனை டீலில் விட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!.. அப்செட்டில் தனுஷ்!…

Published on: May 4, 2024
dhanush
---Advertisement---

தனுஷின் 50வது திரைப்படமாக உருவாகி இருக்கிறது ராயன். இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்திருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், பிரசன்னா என பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ராயன் திரைப்படம் உருவாகி இருக்கிறது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், தனுஷின் அண்ணன் செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அயோத்தி படத்துல அழுதுக்கிட்டே இருந்த பொண்ணா இது?!.. சோபாவுல படுத்து சூடேத்தும் பிரீத்தி அஸ்ராணி..

கையேந்தி பவன் வைத்து நடத்தும் தனுஷ் அவ்வப்போது கூலிப்படையாகவும் வேலை செய்வது போல் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் உண்மையான கதை என்ன என்பது தெரியவில்லை. இந்த படத்தை தனுஷ் துவங்கியதும் தெரியவில்லை. முடித்ததும் தெரியவில்லை.

கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடி வளர்த்திருந்த தனுஷ் அப்படம் வெளியானதும் திருப்பதி சென்று மொட்டையெல்லாம் போட்டுவிட்டு வந்து இப்படத்தை துவங்கினார். சர்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷரா விஜயனும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த படத்துக்கு புளியங்கொம்பா புடிச்ச விஜய்!.. சம்பளத்துல 50 கோடி ஏத்திட்டாரா?!…

இந்த படம் முடிவடைந்தும் ஒரு சரியான நேரத்திற்கு வெளியிட நேரம் பார்த்து வருகிறார்கள். ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனால் அந்த தேதியில் ராயன் படம் வெளியாகும் என செய்திகள் கசிந்தது. ஆனால், இப்போது அந்த தேதியில் இப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஏனெனில், இந்த படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், ஒப்பந்தத்தில் சன் டிவி குறிப்பிட்டுள்ள சில விஷயங்களில் அவருக்கு உடன்பாடு இல்லை எனவும், அதனால், இன்னும் அவர் படத்திற்கு பின்னணி இசையை அமைக்கும் வேலையை துவங்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. சன் டிவி இறங்கி வந்தால் மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டில் கை வைப்பார் என சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.