'ரோஜா'வுக்கு முன்பே ஒரு முழு படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!. அட ஹீரோ அவரா?!..

by சிவா |   ( Updated:2023-10-03 09:55:39  )
rahman
X

AR Rahman: மலையாளத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த ஆர்.கே.சேகர் என்பவரின் மகன்தான் ரஹ்மான். இவருக்கு அப்பா வைத்த பெயர் திலீப். அப்பா இசையமைப்பாளர் என்பதல் சிறுவயது முதலே திலீப்புக்கும் இசையில் அதிக ஆர்வம் வந்தது. சிறு வயதாக இருக்கும்போது கீபோர்ட் வாசிப்பாராம்.

அப்பாவின் மறைவுக்கு பின் ரஹ்மானாக மாறி இசை தொடர்பான சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார். நிறைய விளம்பர படங்களுக்கும் இசையமைத்து வந்தார். அதன்பின், இளையராஜாவிடம் கீ போர்டு வாசிக்கும் வேலை செய்து வந்தார். புன்னகை மன்னன் உள்ளிட்ட இளையராஜா இசையத்த பல படங்களிலும் வேலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: ‘ரத்தம்’ திரைப்படம் அந்த மாதிரி கதையா?.. வேற லெவலில் மிரட்ட வரும் விஜய் ஆண்டனி

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார். வெஸ்டர்ன் இசையில் ரஹ்மான் காட்டிய அதிரடி இளசுகளை அதிர வைத்தது. அப்போதை இளைஞர்கள் பலரும் ரஹ்மானுக்கு ரசிகர்களாக மாறினார்கள். ஒரு புது ஒலியின் அனுபவத்தை ரசிகர்களுக்கு கடத்தினார் ரஹ்மான்.

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கினார். இவர் இசையமைத்த ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. இப்போது வரை தமிழ் சினிமாவின் மதிப்புமிக்க இசையமைப்பாளராக அவர் வலம் வருகிறார். அதேநேரம் ரோஜா படத்திற்கு முன்பே ரஹ்மான் இசையமைத்த ஒரு படம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: 500 ரூபா மட்டும் சம்பளமாக வாங்கி விஜய் நடித்த திரைப்படம்!. இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

எம்.ஜி.ஆர் காலத்தில் அசத்தல் வில்லனாக திரைப்படங்களில் கலக்கிய பி.எஸ்.வீரப்பா தயாரித்த திரைப்படம் வணக்கம் வாத்தியாரே. இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பாடல்கள் எழுதியது மட்டுமில்லாமல், வசனங்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்த படத்திற்கு சம்பத் என்பவர் இசையமைத்திருந்தார். ஒருகட்டத்தில் சம்பத்தை அழைத்த வீரப்பா ஒரு சின்ன தொகையை கொடுத்து ‘இப்படத்திற்கான பின்னணி இசையை முடித்து கொடுத்துவிடுங்கள்’ என சொல்லிவிட்டார்.

ஆனால், அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் கொடுக்க இந்த பணம் பத்தாது என நினைத்த சம்பத், அப்போது இசையமைப்பாளர்களிடம் வேலைசெய்து வந்த திலீப் என்கிற ரஹ்மானை அழைத்து அந்த பணத்தை கொடுத்து ‘உன்னால் இந்த மொத்த படத்திற்கும் பின்னனி இசை அமைக்க முடியுமா?’ என கேட்க அதை சவாலாக எடுத்துகொண்ட ரஹ்மான் ஒரு கீபோர்டின் உதவியோடு வெறும் 8 மணி நேரத்தில் அப்படத்திற்கான மொத்த பின்னணி இசையையும் முடித்து கொடுத்துவிட்டாராம். இந்த தகவலை கவிஞர் வைரமுத்துவே ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் வெளியானது 1991ம் வருடம். அடுத்த வருடம் அதாவது 1992ம் வருடம் ரஹ்மான் ரோஜா மூலம் இசையமைப்பாளராக ரசிகர்களிடம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ போல… அக்கப்போர்ல சிக்கி தவிக்கும் ஆர்.ஜே.பாலாஜி…

Next Story