அனிருத்லாம் இல்ல!.. ரஹ்மான்தான் நம்பர் ஒன்!.. ராமாயணா ஆடியோ உரிமை இவ்ளோ கோடியா?!..
இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

இளையராஜா பீக்கில் இருந்தபோது ரோஜா திரைப்படம் மூலம் இசைப்புயலாக திரையுலகில் நுழைந்தவர்தான் ஏ.ஆர் ரகுமான். அவரின் இசையில் இருந்த துள்ளல் இளசுகளை ஆட்டம் போட வைத்தது., எனவே, இளைஞர்கள் பலரும் ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்களாக மாறினார்கள்.
அவரும் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என பல படங்களிலும் துள்ளலான இசையை கொடுத்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். அதேநேரம் கடந்து சில வருடங்களாகவே அனிருத் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக மாறிவிட்டார். ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பெரிய நடிகர்களே தங்கள் படங்களுக்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்..
சினிமா வியாபாரத்தை பொருத்தவரை எந்த இசையமைப்பாளர் இசையமைத்துள்ள படத்தின் ஆடியோ உரிமை அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ அவர்தான் நம்பர் ஒன் இசையமைப்பாளர். அதை வைத்துதான் கணக்கிடுவார்கள்..
அப்படி பார்த்தால் தற்போது இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்தான் இந்திய அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருக்கிறார். எப்படியெனில், பாலிவுட்டில் உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். பேன் இண்டியா படமாக உருவாகி வரும் இப்படத்தை நிதிஷ் திவாரி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், கே.ஜி.எப் பட நடிகர் யஷ் இராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வீடியோவும் வெளியானது.. வருகிற தீபாவளிக்கு இப்படம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில்தான், ராமாயணா படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறதாம். இதுவரை இந்திய அளவில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து உருவான ஜவான் படத்தின் ஆடியோ உரிமை 30 கோடிக்கு விற்கப்பட்டதுதான் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












