More
Categories: Cinema News latest news

என்ன பெரிய நோலன் படம்!.. மாதவன் படம் பார்த்துருக்கீங்களா?.. ஹாலிவுட்டை அலற விட்ட ஏ.ஆர். ரஹ்மான்!..

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இந்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியான ஓப்பன்ஹெய்மர் படத்தை விட மாதவன் நடித்து தேசிய விருது வாங்கிய ராக்கெட்ரி – நம்பி விளைவு படம் தான் பெஸ்ட் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான மொமென்டோ படத்தின் கதையை சுட்டு சூர்யா முதல் அமீர்கான் வரை பல முன்னணி நடிகர்களை வைத்து கஜினி எனும் பெயரில் படம் எடுத்து கல்லா கட்டியவர் தான் ஏ.அர். முருகதாஸ்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பைக் டூர் மட்டுமில்லை!.. நான் சைக்கிள் டூரும் போவேன்!.. க்யூட்டா சைக்கிள் ஓட்டிய அஜித் குமார்!..

ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரி சிறந்த படம்:

இந்த ஆண்டு அப்படிப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் படமே நம்ம ஊர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்தை போலவே அப்படியே இருக்கே என படம் பார்க்கும் போதே பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அதே கருத்தை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் போது சொல்லியிருப்பது மாதவன் ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. ராக்கெட்ரி படத்தில் அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் இன்ஜினை தயாரித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்காமல், தேச துரோக வழக்கு அவர் மீது பதியப்பட்டு நீதிமன்றத்துக்கு வழக்கு தொடர்பாக ஏறி இறங்கியே தனது வாழ்நாளை வீணடித்தார்.

இதையும் படிங்க: எனக்கே ஸ்கெட்சா? பிச்சு பிச்சு! கலைஞரே கலாய்த்த இசையமைப்பாளர்!

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு:

அந்த கதையை படமாக இயக்கி நடித்திருந்தார் மாதவன். 69வது தேசிய விருது விழா அறிவிப்பில் அந்த படத்துக்கு இந்தியளவில் சிறந்த திரைப்படம் விருதை அறிவித்தது பெரும் விவாதங்களை கிளப்பி உள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தற்போது இப்படியொரு ஆதரவு கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ஓப்பன்ஹெய்மர் அணு ஆயுதத்தை தயாரித்து அமெரிக்கா ஜப்பானை துவம்சம் செய்ய உதவிய நிலையில், அவரை கொண்டாடாமல் அவர் மீது வெளிநாட்டுக்கு அணுகுண்டு தயாரிக்கும் விபரங்களை விற்று விட்டாரா என்கிற விசாரணை கமிஷன் நடப்பது தான் படமாக நோலன் உருவாக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Saranya M

Recent Posts