பாரபட்சம் பார்த்த ஏஆர் ரஹ்மான்! சிவகார்த்திகேயன் மீது அப்படி என்ன அக்கறை?

Published on: December 26, 2023
siva
---Advertisement---

Music Director AR Rahman: தமிழ் சினிமாவில் இளையராஜாவிற்கு அடுத்த படியாக இசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஏஆர் ரஹ்மான். செவி சாய்க்கும் இசையால் இளசுகளை கட்டிப் போட்டவர். இவருடைய சாதனைகள் ஏராளம்.முதன் முதலில் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றவரும் ரஹ்மான் தான்.

அதுவும் இரண்டு விருதுகளை அள்ளிச் சென்றார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் அயலான். குழந்தைகள் பார்த்து கொண்டாட வேண்டிய திரைப்படம். ஆனால் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் பிரச்சினையால் படம் தள்ளிப் போவதில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அக்காவுடன் தான் பஞ்சாயத்து!.. தங்கச்சியிடம் டச்சில் இருக்கும் தனுஷ்.. செளந்தர்யாவுக்கு தாராள மனசு தான்!

இந்த நிலையில் இது பற்றி சிவகார்த்திகேயனிடம் ஏ.ஆர். ரஹ்மான் எதுவும் பேசியிருப்பாரா என தொகுப்பாளர் ஒருவர் வலைப்பேச்சு பிஸ்மியிடம் கேட்டனர். அதற்கு பிஸ்மி ஒரு வேளை கேட்டிருந்தால் சிவகார்த்திகேயன் அது பொய்யான செய்தி என சொல்லி சமாளித்திருப்பார் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இமான் பிரச்சினை வருவதற்கு முன் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் ஒரு பத்திரமாத்து தங்கமாகத்தான் மின்னிக் கொண்டிருந்தார்.

அதனால்தான் சிவகார்த்திகேயன் மீது ரஹ்மானுக்கு வருத்தம் ஏற்படவில்லை. ஆனால் தன் இசையை சிறப்பாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் வைரமுத்து. அவரின் அழகான வரிகளில் எண்ணற்ற வெற்றிப்பாடல்களை இசையமைத்த ரஹ்மான் பொன்னியின் செல்வன் 1. 2 ஆகிய பாகங்களில் பயன்படுத்தவில்லை.

இதையும் படிங்க: அச்சச்சோ பயங்கரமா இருக்கே!.. அடுத்த வருஷம் வரப்போற படங்களுக்கு இப்பவே சாபம் விட்ட ப்ளூ சட்டை மாறன்!

அதற்கு காரணம் சின்மயி கொடுத்த புகார்தான் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் ரஹ்மான் வைரமுத்துவை பயன்படுத்தவே இல்லையாம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இந்த சலுகை கொடுத்தார் ரஹ்மான்? இமானிடமும் கேட்டு தெளிவு பண்ணியிருக்க வேண்டும் அல்லவா? ஆகவே ரஹ்மான் செய்தது தவறு என பிஸ்மி கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.