Connect with us

Cinema News

அச்சச்சோ பயங்கரமா இருக்கே!.. அடுத்த வருஷம் வரப்போற படங்களுக்கு இப்பவே சாபம் விட்ட ப்ளூ சட்டை மாறன்!

கடந்த ஆண்டு இறுதியில் இந்த ஆண்டு விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகப் போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

கமல்ஹாசனின் இந்தியன் 2 இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா, தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: சிவாஜியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜயகுமார்! அதனால் அவருக்கு கிடைத்த பெயர் என்ன தெரியுமா?

ஆனால் கடைசியில், மேலே குறிப்பிட்ட படங்கள் எல்லாம் அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. மேலும், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் வெளியான துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை தியேட்டரில் சும்மா வச்சு செய்தது. வசூல் ரீதியாக இந்தப் படங்கள் வெற்றி அடைந்தாலும் விமர்சன ரீதியாக பெரிய அடி வாங்கியது.

அதிலும் ப்ளூ சட்டை மாறன், இந்த படங்களுக்கு கொடுத்த விமர்சனங்கள் எல்லாம் வேற லெவல் பங்கம். இந்நிலையில், அடுத்த ஆண்டு ரிலீசுக்கு வரிசைக்கட்டி காத்திருக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன் 2023-ம் ஆண்டு பரவாயில்லை என சொல்லு வச்சி்டாதீங்க டா என ட்வீட் போட்டதை பார்த்த ரசிகர்கள் தல இப்பவே சாபம் விட ஆரம்பிச்சிடுச்சு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இனிமே அதிகமா செட்ல பார்க்க முடியாது போல!.. இப்படித்தான் வீட்ல ஹேப்பியா இருக்க போறாரு போல நயன்தாரா!

2024 ஆம் ஆண்டு வெளியாகப் போகும் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படங்கள் என ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பட்டியலில், விடாமுயற்சி, இந்தியன் 2, கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம், தலைவர் 171, வேட்டையன், கங்குவா, மெரி கிறிஸ்துமஸ், தக் லைஃப், தளபதி 68 போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், பல படங்கள் நிச்சயம் சொதப்பும் என்றும் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top