அறம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு!.. மனுசி டிரெய்லரில் மிரட்டும் ஆண்ட்ரியா!.. வசனமெல்லாம் ஃபயரு!..
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பாலாஜி சக்திவேல், நாசர், தமிழரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மனுசி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அறம் படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்தின் கதையை வில்லங்கமான உள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் வசனங்களும் அனல் தெறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மன்சூர் அலி கானுக்கு என்ன ஆச்சு?.. ஐசியூவில் அட்மிட் ஆகிட்டாராம்.. தேர்தல் நேரத்தில் இப்படியா?..
நடிகை ஆண்ட்ரியா கடந்த ஆண்டு அனல் மேல் பனித்துளி எனும் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தன்னை பலாத்காரம் செய்தவர்கள் குறித்து புகார் அளிக்க வரும் ஆண்ட்ரியாவை பலாத்காரம் செய்ததை போலீசார் தான் என்றும் மீண்டும் ஆண்ட்ரியாவை கட்டிப்போட்டு காவல் நிலையத்திலேயே சித்ரவதை செய்ய கடைசில அவர் எப்படி தப்பித்தார். தன்னை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார் என்கிற கதையில் நடித்திருப்பார்.
அதே போல தற்போது மனுசி படத்தில் நாசர், டானா காரன் படத்தின் இயக்குனர் தமிழரசன் உள்ளிட்டோர் ஆண்ட்ரியா மற்றும் அவரது அப்பாவாக நடித்துள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட குடும்பத்தினரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் ஈகோவை டச் பண்ணிய நடிகை!.. கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா?…
அந்த விசாரணையில் போலீசார் ஆண்ட்ரியாவை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கின்றனர் என்பதை காட்டியிருக்கும் விதமும் அவர்களுக்கு வசனம் மூலமாக ஆண்ட்ரியா பதில் கொடுக்கும் விதமும் டிரைலரில் மிரட்டியுள்ளது.
இளையராஜா இசையில் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விசாரணை படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார். இந்தியாவுக்கு இந்தியா என பெயர் வைக்கும் முன்னதாக இந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள் என சொல்லும் கடைசி வசனம் எல்லாம் கவனிக்க வைக்கிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms