அரண்மனை 4 கல்லா கட்டுச்சா?.. காணாமல் போச்சா?.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?..

சுந்தர் சி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த ஆண்டு மலையாள சினிமா பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் தமிழில் ஒரு வெற்றி படம் கூட கிடைக்காத எனது எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஓரளவுக்கு வசூல் ரீதியான வெற்றி படமாக அரண்மனை 4 அமையும் எனத் தெரிகிறது.
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 1 மற்றும் இரண்டு படங்கள் சிறப்பான வெற்றி படங்களாக மாறின. ஆர்யா, ராஷி கன்னாவை வைத்து அவர் எடுத்த மூன்றாவது பாகம் படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும், எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா என்கிற ரீதியில் அரண்மனை 4 படத்தை சொந்தக் காசு போட்டு நம்பி எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அறிவிப்போடு நின்று போன ரஜினியின் திரைப்படங்கள்! மோதலில் முடிந்த திரைப்படத்தின் கதை தெரியுமா?
இந்தப் படத்திலும் யோகி பாபு இருப்பதால் பெரிதாக காமெடி வொர்க் அவுட் ஆகாது என நினைத்த சுந்தர் சி அதை அதிக அளவில் ஒதுக்கிவிட்டு ஹாரர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் ரசிகர்கள் தியேட்டரில் அரண்மனை 4 படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ராஷி கன்னா போன படத்தில் எப்படி டம்மி பீஸாக இருந்தாரோ அதே டம்மி பீஸ் கதாபாத்திரத்தில் தான் இந்தப் படத்திலும் நடித்துள்ளார். தமன்னாவின் அட்டகாசமான நடிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமன்னா மட்டும் தான் பல இடங்களில் படத்தை தாங்கிப் பிடித்து கடைசி வரை பார்க்க வைக்கிறார்.
இதையும் படிங்க: நான் சொல்ற கதைலதான் கமல் நடிக்கணும்.. அடம்பிடிக்கும் லிங்குசாமி.. அடுத்து நடப்பது என்ன?..
கோவை சரளாவின் காமெடிகள் கொஞ்ச இடங்களில் தூள் கிளப்பிய நிலையில் தியேட்டரில் சில இடங்களில் சிரிப்பு சத்தமும் கேட்கின்றன. இதுபோதும்பா வெற்றி படத்துக்கு என நினைத்து விட்ட சுந்தர் சிக்கு முதல் நாள் வசூலாக 4 கோடி ரூபாய் வரை கிடைத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அரண்மனை 4 திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த வாரம் 15 முதல் 20 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 50 கோடி வசூலை இந்த படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 கோடி வரை செல்வது கஷ்டம் தான்.
இதையும் படிங்க: அடுத்து அந்த ஹீரோவை டிக் செய்த வேட்டையன் பட இயக்குனர்!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!…