வீடு தேடி வந்த ஹீரோ.. அவர் இல்லனா அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி ஆகியிருக்க முடியாது…

by Rajkumar |   ( Updated:2023-07-10 14:32:44  )
aravind samy
X

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெரும் நட்சத்திரங்களாக வருவதற்கு இயக்குனர்கள் பெரிதும் உதவியுள்ளனர். கமல் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்கள் சினிமாவில் உயரத்தை தொடுவதற்கு இயக்குனர் கே. பாலச்சந்தர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அதே போல இயக்குனர் பாரதிராஜா பாண்டியன், சுதாகர் போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து தொடர்ந்து தனது திரைப்படங்களிலும் வாய்ப்பளித்து வந்தார். அப்படியாக இயக்குனர் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மற்றொரு நடிகராக நடிகர் அரவிந்த் சாமி இருக்கிறார்.

Aravindsamy

இதையும் படிங்க:வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..

அரவிந்த் சாமியை தளபதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மணிரத்தினம். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் அரவிந்த் சாமியை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.

அரவிந்த் சாமி பெற்ற வாய்ப்பு:

அதன் பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்றார் அரவிந்த்சாமி. ஆனால் 2000த்திற்கு பிறகு பட வாய்ப்புகளை இழக்க துவங்கினார் அரவிந்த் சாமி. அதன் பிறகு 2013 இல் கடல் படத்தில் நடித்தாலும் கூட அதற்கு பிறகு வந்த தனி ஒருவன் திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது.

thani oruvan

இதையும் படிங்க:‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு

தனி ஒருவன் திரைப்படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் மோகன் ராஜா கேட்டப்போது நடிக்க மறுத்துவிட்டாராம் அரவிந்த் சாமி. ஏனெனில் அதுவரை அவர் வில்லனாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் அரவிந்த் சாமியின் வீடு தேடி வந்த ஜெயம் ரவி, இந்த படத்தில் நீங்கள் நடிக்கவில்லை என்றால் நானும் நடிக்க மாட்டேன் என நேரடியாக கூறிவிட்டாராம். எனவே ஜெயம் ரவியின் வற்புறுத்தலில்தான் தனி ஒருவன் திரைப்படத்தில் நடித்துள்ளார் அரவிந்த் சாமி.

இந்த நிகழ்வை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மகனின் தயவால்தான் வண்டியே ஓடுதா? லீக் ஆன மணி சார் ரகசியம்..

Next Story