Connect with us
Archana-Arun

Bigg Boss Tamil 8

Archana-Arun: ஹாய் ஹர்லி… அருண் பிறந்தநாள் வாழ்த்தில் உடைந்த ரகசியம்.. அர்ச்சனா எண்ட்ரி இருக்குமோ?

Archana-Arun: பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் அருண் பிரசாத் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய காதலிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காதலி குறித்த சர்ப்ரைஸ் தான் பலரை அதிர வைத்துள்ளது.

அருண் பிரசாத்: குறும்படம் மூலம் பிரபலமானவர் அருண் பிரசாத். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக என்று கொடுத்தார். முதலில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த அருண் தொடர்ந்து சீரியலின் போக்கு சரியில்லாத காரணத்தால் பலரிடமும் ட்ரோல் மெட்டீரியலாக மாறினார்.

இதையும் படிங்க: Tamannah: பாலிவுட் இல்ல…! டைரக்ட்டா ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா… ஸ்டைலிஷ் லுக்!…

அர்ச்சனாவுடனான காதல்: அருணுக்கும், ராஜா ராணி சீரியல் மூலம் புகழ்பெற்ற அர்ச்சனா ரவிச்சந்திரனுக்கும் காதல் இருப்பதாக பல வருடங்களாக கிசுகிசுப்பு எழுந்து வருகிறது. இதுகுறித்து இருவருமே எந்தவித விளக்கமும் பொதுவெளியில் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சீசன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் அந்த சீசன் டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார். இதைத்தொடர்ந்து தன்னுடைய காதலர் அருணுக்கு இந்த சீசன் பிக் பாஸை பரிந்துரை செய்ததும் அர்ச்சனா என கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையேயான காதல் குறித்து அர்ச்சனா நிகழ்ச்சியில் பேசவில்லை. ஆனால் அருண் தொடக்கத்தில் இருந்தே தன்னுடைய காதலி குறித்து பதிவு செய்து கொண்டே வருகிறார். கடந்த வார டாஸ்க்கில் கூட தன்னுடைய காதலி பற்றி பேசியதும் வைரலாகி வந்தது.

இதையும் படிங்க: Kanguva: ‘கங்குவா’ டிரெய்லரில் கடைசி சீன் நோட் பண்ணீங்களா? தயாரிப்பாளரின் பேராசையால் மாறிய கதை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்: இந்நிலையில் நேற்றைய லைவில், ஹாய் ஹர்லி நீ நல்லா இருக்கேன்னு நம்புறேன். நான் நல்லா இருக்கேன். இந்த வாரம் கேப்டனாக மாறியிருக்கிறேன். இன்னிக்கு உன்னுடைய பிறந்தநாள். பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எப்போதும் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும். 

மிக விரைவில் கப்புடன் வந்து உன்னை சந்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை பார்த்துக்கொள். ஐ லவ் யூ. பாய் எனப் பேசியிருக்கிறார். இதில் காதலியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அர்ச்சனா ரவிச்சந்திரன் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அர்ச்சனா ட்வீட்டைக் காண: https://x.com/Archana_ravi_/status/1856060599383245042

அந்த பதிவில் என்னுடைய பிறந்தநாள் பூர்த்தி அடைந்தது. இதற்காக நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்தேன். இது ஒரு அற்புதமான உணர்வு எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் இருவரும் காதலிப்பது ஒரு வழியாக உறுதியாக இருக்கிறது.

இதனால் பிக் பாஸ் குடும்ப நண்பர்கள் சுற்றில் அருணை காண அர்ச்சனா உள்ளே வர அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அப்படி ஒரு எண்ட்ரி இருக்கும் நிலையில் அது டிஆர்பிக்கும் பெரிய உதவியாக இருக்கும் என்பதால் அருண் அந்த வாரம் வரை தக்கவைக்கப்படலாம் எனவும் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க:  Vijay Serial: ராதிகாவிடம் சிக்கிய கோபி… விஜயாவுக்கு கிடைத்த பெத்த தொகை… பாண்டியன் திடீர் மாற்றம்..

google news
Continue Reading

More in Bigg Boss Tamil 8

To Top