Connect with us
munbae va

Cinema News

‘முன்பே வா’ பாடல் உருவாக இத்தனை பஞ்சாயத்தா? வாலிக்கும் இயக்குநருக்கும் இடையே முற்றிய வாக்குவாதம்..

தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரக்கணக்கான காதல் பாடல்கள் வந்திருக்கிறது. ஆனால் அவற்றில் மிக சில பாடல்கள் தான் நம் காதலை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். சில பாடல்கள் மட்டும் தான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம் மனதில் நிலைத்திருக்கும். அப்படி ஒரு காதல் பாடல் தான் முன்பே வா என் அன்பே வா.. இந்த பாடல் ஏதோ நேற்று கேட்டது போல இருக்கும். ஆனால் இந்த பாடலை நாம் 17 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். 

இன்று வரை சலிக்காமல் கேட்கும் அளவிற்கு இருக்கும் இந்த பாடலிற்கு பின்னால் பல பிரச்சனைகள் உள்ளது. இந்த பாடல் உருவாக்கப்பட்ட போது, இயக்குநர் கிருஷ்ணாவுக்கும், பாடலாசிரியர் வாலிக்கும் இடையே சண்டை வந்து, அந்த பிரச்சனையை ஏ.ஆர்.ரகுமான் பேசி சரி செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம் பலருக்கு தெரியாது. 

munbae

ஒரு காதல் பாட்டு வேண்டும் என்று இயக்குநர் கிருஷ்ணா கேட்ட போது, ஏ.ஆர்.ரகுமான் இந்த மெட்டை போட்டு காட்டியுள்ளார். ஆனால் இது ஏ.ஆர்.ரகுமானுக்கே திருப்திகரமாக இல்லை. இது சோக பாட்டு போல இருக்கிறது. நான் வேறு ஒரு மெட்டு போட்டுவிட்டு சொல்றேன் என கூறிவிட்டார். ஆனால் இயக்கநர் கிருஷ்ணாவுக்கு இந்த மெட்டு மிகவும் பிடித்துவிட்டதால், இல்லை இதே மியூசிக்கிக்கு போட்டுக்கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.  

அதன் பிறகு கவிஞர் வாலி முதலில் வேறு ஒரு பாடலை எழுதிக்கொடுத்திருக்கிறார். ஆனால் அது இயக்குநருக்கு திருப்திகரமாக இல்லை. இதனையடுத்து வேறு வரிகளில் எழுதி தரும்படி கேட்டுள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. நான் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை எழுதியுள்ளேன். நீ என் பாடலையே நிராகரிக்கிறாயா என்று கடுப்பாகியுள்ளார் வாலி. நீங்கள் பல பாடல்களை எழுதியிருக்கலாம். ஆனால் இது என்னுடைய காதல், நான் எப்படி நினைக்கிறேனோ அப்படி தானே இருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். 

vali

பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் வாலியை சமாதானம் செய்தார். அடுத்த நாள் அதிகாலையில் இயக்குநருக்கு போன் செய்த வாலி, வேறு ஒரு பாடல் வரிகள் எழுதி வைத்திருக்கிறேன். வந்து பார்த்து இதையும் ரிஜெக்ட் பண்ணிட்டு போ என்று கோபமாக கூறிவிட்டு, கட் செய்துவிட்டார் வாலி. வேவேகமாக அங்கு சென்று பார்த்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. 

இது தான் முன்பே வா அன்பே பாடலின் வரிகள். இந்த பாடல் நமக்கு மட்டுமல்ல, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பிடித்தமான பாடல் தான். அவரே அதை ஒரு மேடையில் கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை மணிரத்னம் அவர்களுக்கு அனுப்பி, அவரின் கருத்தை கேட்பது ஏ.ஆர்.ரகுமானின் வழக்கம். அதே போல இந்த பாடலையும் போட்ட உடனேயே அவருக்கு  அனுப்பி கேட்க சொன்னாராம் ஏ.ஆர்.ரகுமான்.

google news
Continue Reading

More in Cinema News

To Top