நாடக மேடையில் சொந்த டயலாக்கை கூறி அண்ணாவை மடக்கிய கண்ணதாசன்… ஆனால் பேரறிஞர் என்ன பண்ணார் தெரியுமா??
1949 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். அக்கட்சியின் வளர்ச்சியில் சினிமா, மேடை நாடகங்கள் ஆகியவற்றிற்கு முக்கிய பங்குண்டு.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், கண்ணதாசன் போன்ற பலருக்கும் அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு வகுத்திருக்கின்றனர். இதில் மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் அறிஞர் அண்ணா மேடை நாடகங்களை இயற்றியது மட்டுமல்லாது அதில் நடிக்கவும் செய்திருக்கிறாராம். அதே போல்தான் கண்ணதாசனும் சில நாடகங்களில் நடித்துள்ளாராம்.
அவ்வாறு ஒரு பிரச்சார நாடகத்தில் அறிஞர் அண்ணாவும் கவிஞர் கண்ணதாசனும் இணைந்து நடித்தார்களாம். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது அந்த நாடகத்தில் அண்ணாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கொடுக்காதது போன்ற கதாப்பாத்திரத்தில் கண்ணதாசன் நடித்திருந்தாராம். அதில் அண்ணாதுரை கண்ணதாசனிடம் கொடுத்த காசை திருப்பி கேட்பது போன்ற ஒரு காட்சி எழுதப்பட்டிருந்தது.
அந்த காட்சியில் அண்ணா, கண்ணதாசனிடம் “ஏன்யா, எங்கிட்ட பணம் வாங்கிருந்தியே, எப்போ திருப்பிக் கொடுக்கப்போற?” என கேட்டாராம். அதற்கு ‘கூடிய சீக்கிரம் திருப்பிக் கொடுத்திடுறேன்” என கண்ணதாசன் கூற, “என்னப்பா, எப்போ கேட்டாலும் கூடிய சீக்கிரம் கூடிய சீக்கிரம்ன்னு சொல்றியே அந்த கூடிய சீக்கிரம் எப்போ? அதை முதல்ல கூடிய சீக்கிரம் சொல்லு” என அழுத்தமாக கேட்டாராம் அண்ணா.
நாடக வசனத்தின்படி அதற்கு கண்ணதாசன் “சீக்கிரம் கொடுத்திடுறேன்” என்று கூறவேண்டுமாம். ஆனால் அந்த வசனத்தை பேசாமல் “நீங்க நம்பலைன்னா நான் இப்போவே செக் எழுதி கொடுத்திடுறேன்" என தனது சொந்த வசனத்தை பேசிவிட்டாராம்.
நாடகம் நடந்துக்கொண்டிருக்கும்போது இவ்வாறு ஒரு கதாப்பாத்திரம் சொந்த வசனத்தை பேசிவிட்டால், அந்த வசனத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாகத்தான் மற்றொரு கதாப்பாத்திரம் பேச வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திறமை நாடக நடிகர்களிடம் இருக்கவேண்டும். சற்று தயங்கினால் கூட பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்களாம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே இல்லாமல் எம்.ஜி.ஆரை வைத்து படமாக்கிய பிரபல இயக்குனர்… கேட்கவே ஆச்சரியமா இருக்கே!!
கண்ணதாசன் இவ்வாறு சொந்த வசனத்தை பேசியவுடன், சமயோஜிதமாக சிந்தித்த அண்ணா, “செக் எழுதி கொடுப்பியா? நீ எப்போ கையெழுத்துப்போட கத்துக்கிட்ட” என்று கண்ணதாசனின் வசனத்திற்கு ஈடுகொடுப்பது போல் அதி வேகமாக தனது வசனத்தை பேசினாராம் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவை மேதை என்று சும்மாவா சொல்கிறார்கள்!!