Connect with us

Cinema News

சரக்கு ஊற்றி!.. அர்ஜுன் மகளுடன் ஆட்டம் போட்ட தம்பி ராமையா மகன்!.. ஒரே மஜா தான் போல!..

அர்ஜுன் மகளை கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் கோயிலில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி லீலா பேலஸில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நடிகர்கள் என்பதால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக இருவரும் நடனமாடும் காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. திரைப்படங்களில் காட்டுவதைப் போல மது கோப்பைகளை அடுக்கி வைத்து ஷாம்பைன் பாட்டிலை ஓபன் செய்து உமாபதி ராமையா கோப்பைகளில் நிரப்பும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அப்பா பெயரையே பயன்படுத்த மாட்டியா?.. சிவாஜி மகனுக்கு என்ன நிலைமை ஆச்சு தெரியுமா?.. பிரபலம் பேச்சு!..

நடிகர் அர்ஜுன் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், அதில் போட்டியாளராக பங்கேற்ற உமாபதி ராமையாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்தது போல அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவின் காதல் கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில் பலநூறு கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார் உமாபதி ராமையா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல கோடிகள் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கணவனும் மனைவியும் ஆட்டம் பாட்டத்துடன் பிரபலங்களை வியக்க வைத்த போட்டோக்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிக்கனு கூப்பிட்டு அவங்க எதிர்பார்த்ததே வேற! குஷ்பு படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்

உமாபதி ராமையா நடித்த பித்தல மாத்தி திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அந்த படத்தின் புரமோஷனுக்கே வராமல் தனது திருமணத்தில் பிசியாக உமாபதி ராமையா இருந்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் தியேட்டர் வாசலில் படத்தைப் பார்க்க யாருமே வரவில்லை என புலம்பினார்.

சினிமாவில் ஹீரோவாக பெரிதாக சாதிக்காத நிலையில், அவரை போலவே ஹீரோயினாக அறிமுகமானாலும் ஹிட் அடிக்காமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்ட ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் தற்போது வெளிநாட்டில் ஹனிமூன் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்த்!.. விஜய் போட்ட கண்டிஷன்!. பதட்டத்தில் வெங்கட்பிரபு…

google news
Continue Reading

More in Cinema News

To Top