Cinema History
ஏ.ஆர்.ரஹ்மான் வாலியிடம் போட்ட கண்டிஷன்..வாலியோட ரியாக்ஷன் என்னனு தெரியுமா!..
வாலி தமிழ் திரையுலகின் பழங்கால கவிஞர்,கதையாசிரியர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். இவர் 1950 முதல் பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் கருத்துகள் நிறைந்ததாகவும் இருக்கும். இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்தும் உள்ளார். காதல் வைரஸ், பார்த்தாலே பரவசம் போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
இவரின் பாடல் வரிகள் கேட்பதற்கு இனிமையானதாக இருக்கும். அழகர் மலை கள்வன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராய் அறிமுகமானார். பின் சிகப்பு ரோஜாக்கள், அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயும் காதல் என அன்று தொட்டு இன்று வரை இவரின் பாடல் வரிகள் இருக்கின்றன.
இதையும் வாசிங்க: கடைசியில என்ன பலிகடா ஆக்கிட்டானுங்க!.. கலவர பூமியான இசை கச்சேரி.. ரைமிங்கில் புலம்பும் ஏ.ஆர். ரஹ்மான்!..
இதைபோல் தமிழ் சினிமாவில் இசையில் பெரிய சகாப்தத்தை கொண்டு வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவரின் இசை ரசிகர்கள் மனதை கட்டி போட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
ஏ.ஆர்.ரஹ்மானும் கவிஞர் வாலியும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். பிரபுதேவா நடிப்பில் வெளியான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் உள்ள முக்காலா முக்காபுலா பாடல் வாலி எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததாகும். மேலும் இந்தியன் படத்தில் வந்த மாயா மச்சிந்ரா மச்சம் பார்க்க வந்தாயா பாடலும் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியதாகும். பழங்கால கவிஞர் இக்கால பாடலை எழுதுவாரா என சந்தேகம் இயக்குனர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் இவை அனைத்துக்கும் வாலி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
இதையும் வாசிங்க: கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்…
அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இவரின் பாடல் வரிகள் இருந்துள்ளன. காதல் தேசம் படத்தில் நட்புக்கு அடையாளமாக விளங்கிய பாடலான முஸ்தபா முஸ்தபா பாடலும் இவர்களின் கூட்டணியில் உருவானதுதான். அதைபோல் 2006ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம்தான் சில்லுனு ஒரு காதல்.
இப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் வரும் முன்பே வா என் அன்பே வா பாடல் வாலி எழுதியதுதான். இப்பாடல் முதலில் அன்பே வா என் முன்பே வா என எழுதப்பட்டது. ஒரு முறை ஏ.ஆர்.ரஹ்மான் வாலியிடம் சென்று மா வரிசை பாடல்கள் நமது கூட்டணியில் வெற்றி பாடலாக அமைகிறது. அதனால் இப்பாடலிலும் அன்பே வா என்று ஆரம்பிப்பதற்கு பதில் முன்பே வா என ஆரம்பியுங்கள் என்று கேட்டுள்ளார்.
இதையும் வாசிங்க: வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்
அதற்கு வாலியும் ஒப்பு கொண்டு முன்பே வா என் அன்பே வா என பாடல் வரிகளை மாற்றி எழுதியுள்ளார். இப்பாடலும் இலைஞர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. என்னதான் தன்னுடன் சிறிய வயதுடையவர் தனது பாடலை திருத்தம் செய்ய சொன்னாலும் பெரிய மனதோடு அதனை செய்தவர் கவிஞர் வாலி.