தமிழ் சினிமா தரம் கெட்டு போனதற்கு காரணமே விஜய், அஜித் தான் .! மேடையில் கொந்தளித்த சூப்பர் ஹிட் ஹீரோ.!

தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜீத் தான். இவர்களை வைத்து தான் தற்போதைய தமிழ் சினிமா வியாபாரம் நடந்து வருகிறது. இவர்களில் யார் பெரியவர் யார் படம் அதிக வசூல் செய்கிறது? யார் படம் முதல்நாள் வசூல் அதிகம் வசூலித்து உள்ளது? என்பதை வைத்தே இங்கு வியாபாரம் நடக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இன்னும் களத்தில் இருந்தாலும், அவர்கள் தற்போது மூத்த நடிகர்களாக மாறிவிட்டனர் என்பதே உண்மை. அவருடைய ரசிகர்களும் தற்போது மூத்தவர்கள் ஆகிவிட்டனர். அதனால், இந்த ரசிகர்கள் சண்டைகளை அவர்கள் தற்போது வர விரும்புவதில்லை.

valimai

சமீபத்தில் வெளியான அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெற தவறி உள்ளது என்றே கூறலாம். அல்லது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் கூறலாம். அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் நன்றாக இருந்தாலும், சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படம் தொய்வடைந்துவிட்டது. அண்மையில் வெளியான விஜயின் பீஸ்ட் திரைப்படமும் போதிய வரவேற்பை பெறத்தவறி வருகிறது.

இந்நிலையில் 80களில் சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வந்த நடிகர் அருண்பாண்டியன். அண்மையில் ஓர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ' மற்ற மொழி திரைப்படங்கள் போல தமிழ் சினிமா பெரிதாக பேசப்படுவதில்லை. தமிழ் சினிமாவின் தரம் குறைந்து போனதற்கு காரணம் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தான்.

இதையும் படியுங்களேன் - சில்வர் ஜூப்ளி நாயகனின் ‘ஹாரா’ டீசர் வீடியோ.! இனி பாக்ஸ் ஆபிஸ் இவர் கண்ட்ரோல் தான்.!

நாங்கள் நடிக்கும் காலத்தில் படத்திற்கான பட்ஜெட்டில் 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக பெறுவோம். ஆனால், தற்போது 90 சதவீத பட்ஜெட் ஹீரோவுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள 10 சதவிகிதத்தில் தான் மொத்த படமும் எடுக்கப்படுகிறது. அதனால் தமிழ் சினிமாவின் தரம் குறைந்து வருகிறது.' என்று காட்டமாக தனது கருத்தினை முன்வைத்தார்.

இந்த கருத்து மேடையில் இருந்தவர்களை மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையே சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு மேடையிலேயே இயக்குனர் அமீர் எதிர்த்து பதில் அளித்துவிட்டார்.

Related Articles
Next Story
Share it