தவறான பாதைக்கு சென்ற அருண் விஜய்... தளபதியால் மீண்ட சூப்பர் தகவல்..செமல!

by Akhilan |   ( Updated:2022-09-24 05:54:59  )
தவறான பாதைக்கு சென்ற அருண் விஜய்... தளபதியால் மீண்ட சூப்பர் தகவல்..செமல!
X

தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாகப் பயணித்துக் கொண்டிருப்பவர்களில் அருண் விஜய் முக்கியமானவர். இடையில் அவரது படங்கள் சரியாகப் போகாததால், பெரிய கேப் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு, அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் விக்டர் கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.

அதன்பிறகு, தொடர்ச்சியாக ஹீரோவாகப் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் கேப் விழுந்தபோது சோர்ந்திருந்த அருண் விஜய் - நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த பிறகுதான் ஒரு பெரிய மனமாற்றம் அவருக்குள் எழுந்திருக்கிறது.. அவர்கள் சந்தித்தபோது என்ன நடந்தது?

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களுள் ஒருவரான விஜயகுமாரின் ஒரே மகன்தான் அருண் விஜய். 1995-ம் ஆண்டு வெளியான சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், துள்ளித் திரிந்த காலம், பாண்டவர் பூமி போன்ற படங்களில் அவரின் நடிப்பு பரவலாகக் கவனம் பெற்றது. ஆனால், இடையில் அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கிய நிலையில், இடைவெளி எடுத்துக் கொண்டார்.

இதனால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன அருண் விஜய், நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவெடுத்துவிட்டாராம். நடிப்புதான் சரிப்பட்டு வரவில்லை; இனிமேல் படங்கள் தயாரிக்கலாம் என்று நினைத்திருக்கிறார். அவரது குடும்பத்துக்கு வெளியில் இருப்பவர்கள் பலரும் அதையே அட்வைஸாகக் கொடுத்திருக்கிறார்கள். சரி தயாரிப்பில் இறங்கலாம் என்று நடிகர் விஜய்யின் கால்ஷீட் கேட்டுப் பார்க்கலாம் என முயற்சித்திருக்கிறார். இதற்காக விஜய்யின் வீட்டுக்கே போய் நேரில் அவரைச் சந்தித்திருக்கிறார். இதைக் கேட்டவுடன் விஜய் பயங்கரமா ஷாக் ஆகிட்டாராம்.

இதையும் படிங்க: விஜயையே மிரள வைத்த அருண் விஜய்…யாரிடம் இதை கூறினார் தெரியுமா?…

அப்போது விஜய், 'என்னாச்சு பிரதர் உங்களுக்கு... யார் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். நீங்க என்னைவிட நல்லாவே ஃபைட் பண்றீங்க. உங்களைப் பத்திதான் நான் அடிக்கடி என்னோட ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டே இருப்பேன். நீங்க ரொம்ப பெட்டர். ரொம்ப டவுனா ஃபீல் பண்ணாதீங்க... அது நடக்கும். என்னோட கால்ஷீட் கேக்குறீங்க.. அதைப்பத்தி நான் வேணும்னா அப்பாகிட்ட (எஸ்.ஏ.சந்திரசேகர்) பேசுறேன். ஆனால், அடுத்தவங்க என்ன சொல்றாங்கனு கவலைப்படாதீங்க. நிச்சயம் நீங்க முன்னுக்கு வருவீங்க. அது உங்களுக்குள்ள இருக்கு’னு ரொம்பவே பாசிட்டிவா பேசியிருக்கார்.

அருண் விஜய்

அதோட தன்னுடைய புது வீட்டையும் அருண் விஜய்யைக் கூட்டிட்டுப் போய் காட்டியிருக்கார். அவரோட காஃபி குடிச்சுட்டு வழியனுப்பி வைத்திருக்கிறார். விஜய் கொடுத்த நம்பிக்கை அவருக்கு புது தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. என்ன மனநிலையில் போனாரோ... அதற்கு நேரெதிராக பாசிட்டிவ் எனர்ஜியோடு திரும்ப வந்த அருண் விஜய், தன்னுடைய குடும்பத்தினரிடம் தான் மீண்டும் நடிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அன்று விஜய் சொன்ன விஷயங்களை எமோஷனலாக ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்த அருண் விஜய், அதை இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் நெகிழ்ந்திருப்பார்... ஹாட்ஸ் ஆஃப் டு யு தளபதி!

Next Story