பொங்கலுக்கு வரும்னு பார்த்தா!.. இப்போதான் பாலா டீசருக்கே தேதி குறிச்சிருக்காரு.. வணங்கான் வருது!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா தயாரித்து நடிக்கிறேன் என 2டி நிறுவனம் சார்பில் வணங்கான் திரைப்படம் தொடங்கப்பட்டது. கன்யாகுமரியில் பல மாதங்கள் சூட்டிங் அடிக்கடி சண்டைகளுக்கு நடுவே எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி சொல்லியே நடத்தினர்.

கடைசியில் இதற்கு மேல் முழு பூசணியை சோத்துல மறைக்க முடியாது என நினைத்த சூர்யா இந்த படத்தில் இருந்து தானும் தனது நிறுவனமும் கூடவே ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியும் ஒதுங்குவதாக அறிவித்து விட்டார்.

இதையும் படிங்க: எப்படிப்பா அந்த பழைய யுவனை மறுபடியும் தேடி பிடிச்சிங்க!.. நிவினை தொடர்ந்து கவினுக்கும் சூப்பர் சாங்!

அதன் பின்னர் கடைசியா வந்தவர் தான் அருண் விஜய். பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் அவருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பிரியா பவான் சங்கரும் தான் வணங்கான் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே வணங்கான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. உடனடியாக கிடப்பில் கிடந்த மிஷன் பார்ட் 1 படத்தை அருண் விஜய் ரிலீஸ் செய்தார். படம் நல்லா இருந்தும் பார்க்க கூட்டம் வராத நிலையில், படம் வந்த சுவடே தெரியாமல் போய் விட்டது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் சீரியஸா பேசும் போது மட்டும் ஏன் சிரிப்பு வருது!.. ’அமரன்’ அமர்க்களப்படுத்துமா?

இப்படிப்பட்ட சூழலில் பாலாவின் வணங்கான் படம் அருண் விஜய்க்கு மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 19ம் தேதி படத்தின் டீசர் வெளியாகிறது. மார்ச் மாதம் படத்தை வெளியிடும் முடிவில் பாலா இருப்பதாக கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story