
Cinema News
அட அது ஒரு ஹாலிவுட் படமா?!.. ரஜினிக்கே விபூதி அடித்த பிரபல இயக்குனர்…
Rajini: தமிழ் சினிமா துவங்கியது முதலே பல ஹாலிவுட் நாவல்கள் மற்றும் திரைப்படங்களை சுட்டு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே அந்த ஹாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனத்தை அணுகி முறையாக ரீமேக் உரிமையை முறையாக வாங்கி படமாக எடுப்பார்கள். இது நடப்பது கூட கடந்த சில வருடங்களாகத்தான்.
நம்ம சினிமா இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகள். ஒரு ஹாலிவுட் படத்தின் முழு கதையையும் அப்படியே எடுக்காமல் அதில் இருக்கும் கான்செப்டை மற்றும் எடுத்துக்கொள்வார்கள். கதையை மாற்றி வேறு மாதிரி எடுப்பார்கள். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டதுதான்.
இதையும் படிங்க: இதுக்காகவா அந்த படத்துல நடிக்கல? சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண விக்ரம்
உதாரணத்திற்கு அவர் நடித்த ‘அன்பே வா’ படம் கூட ‘Come September’ என்கிற படத்திலிருந்து சுட்டதுதான். அதேபோல், சிவாஜி படங்களும் வெளிவந்துள்ளது. ஹிட் அடித்த பல ஹிந்தி படங்கள் தமிழில் உருவாகியிருக்கிறது. ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படம் கூட பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த படம்தான். அதன்பின் அதே கதையில் அஜித் நடித்தார்.
மிஷ்கின் எடுத்த நந்தலாலா படம் கூட ஒரு ஜப்பானிய திரைப்படம்தான். ஆனால், அதை டைட்டில் கார்டிலும் போட மாட்டார்கள். பேட்டிகளிலும் சொல்ல மாட்டார்கள். அஜித் நடித்த கஜினி படம் கூட கிறிஸ்டோபர் நோலன் எடுத்த ‘மொமெண்டோ’ படம்தான். கதையை தமிழுக்கு ஏற்றமாதிரி கொஞ்சம் மாற்றி பட்டி டிக்கரிங் செய்து எடுப்பார்கள்.
இதையும் படிங்க: ரஜினி பக்கத்துல இருக்க வேணாம்!.. ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய விஜய்!.. அப்ப அது உண்மைதானா?..
சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி, ரம்பா, சௌந்தர்யா என பலரும் நடித்து 1997ம் வருடம் வெளியான திரைப்படம் அருணாச்சலம். இந்த படம் ஹாலிவுட்டில் 1985ம் வருடம் வெளிவந்த ‘Brewster’s Millions’ என்கிற படத்தின் காப்பிதான். முறையாக ரீமேக் உரிமைய கூட வாங்காமல்தான் இப்படத்தை எடுத்துள்ளனர்.
பொதுவாக சுந்தர் சி ஏற்கனவே ஹிட் அடித்த தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை சுட்டுதான் படமெடுப்பார். அருணாச்சலம் படத்தை பொருத்தவரை ஹாலிவுட்டில் இருந்து சுட்டுள்ளார். அதேநேரம், இந்த படத்திற்கு ரஜினிதான் தயாரிப்பாளர் என்பதால் அவர்தான் இந்த கதையை வைத்து சுந்தர் சியை படமாக எடுக்க சொன்னதாகவும் சிலர் சொல்வதுண்டு.
இதையும் படிங்க: ரஜினியோட இந்த படம் எம்ஜிஆர் படத்தோட காப்பியா?.. அட என்னடா சொல்றீங்க!…