அடிச்சி கேட்டாலும் சொல்லிடாதீங்க!.. அசிங்கமா போயிடும்!.. அருண்விஜய் போட்ட கண்டிஷன் லீக் ஆயிடுச்சே!..

by amutha raja |
arun vijay
X

முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் பழங்கால நடிகரான விஜயகுமாரின் மகன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் துணிச்சல், மாஞ்சா வேலு, தடையற தாக்க போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் படங்கள் பொதுவாகவே பெரிய அளவிலான வெற்றியை கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும்.

இவர் கதாநாயகனாய் மட்டுமல்லாமல் வில்லனாக நடிக்கவும் மிகவும் பொறுத்தமாக இருப்பார். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவரின் வில்லத்தனமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையும் வாசிங்க:இறைவன் மேல பாரத்த போட்டு களத்துல இறங்கும் ஜெயம் ரவி… இந்த ரீலும் அறுந்து போகாம இருந்தா சரிதான்…

மேலும் இவரின் அடுத்த படத்திற்கான தகவல்களும் கிடைத்துள்ளன. தமிழில் மான் கராத்தே, கெத்து போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கிரிஸ் திருகுமரன். இவரின் அடுத்த திரைப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்புகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அருண்விஜய் தனது படங்களுக்கு சம்பளமாக 6 கோடி வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது தனது சம்பளத்தினை குறைத்துள்ளாராம். இப்படத்திற்கு இயக்குனரிடம் 5 கோடி சம்பளத்தில் நடிக்க ஒத்துகொண்டாராம். ஆனால் இயக்குனரிடம் அவர் ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுள்ளார்.

இதையும் வாசிங்க:ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!

அதன்படி தான் வாங்க போகும் சம்பளத்தினை பற்றிய தகவல்களை யாரிடமும் சொல்ல கூடாது என கூறியுள்ளாராம். தனது சம்பளம் குறைவது வெளியில் தெரிந்தால் அது தனது அடுத்தகட்ட வளர்ச்சியை தடுக்கும் எனும் நோக்கில் இவர் இவ்வாறு கூறியுள்ளாராம்.

ஒவ்வொருவருக்கும் மறுவாய்ப்பு வருவது கஷ்டம். ஆனால் அருண் விஜய்க்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு அவர் சினிமா துறையில் ஜொலிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:9வது நாளிலும் தெறிக்கவிடும் ஷாருக்கான்!.. அந்த மொட்டை தலை தான் ஹைலைட்.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!

Next Story