9வது நாளிலும் தெறிக்கவிடும் ஷாருக்கான்!.. அந்த மொட்டை தலை தான் ஹைலைட்.. ஜவான் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் 9வது நாள் அதிகாரப்பூர்வ வசூலையும் ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக 525 கோடி ரூபாய் வசூலுடன் ஜெயிலர் படத்துக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் நிறுத்திக் கொண்ட நிலையில், 600 கோடியை தாண்டி 700 கோடி என ஜவான் வசூல் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ரெட் கார்டு ஒரு பக்கம் இருக்கட்டும்!.. எனக்கு ஸ்ரீதேவி பொண்ணு தான் வேணும் என அடம்பிடிக்கும் அதர்வா?

தளபதி விஜய்யை வைத்து அட்லீ இயக்கிய அத்தனை படங்களின் மொத்த வசூலையும் ஷாருக்கானின் ஜவான் ஒரே படமே அள்ளி விடும் என்றே தெரிகிறது. ஏகப்பட்ட படங்களின் மிக்சர் மசாலா என்று ஜவான் திரைப்படம் விமர்சிக்கப்பட்டாலும், இயக்குனர் அட்லீ உஷாராக அத்தனை படங்களையும் தமிழில் இருந்து மட்டுமே பயன்படுத்தி உள்ள விதத்தில் தான் தனது மார்க்கெட்டிங் தந்திரத்தை காட்டி உள்ளார் என்கின்றனர்.

பாலிவுட் ரசிகர்களுக்கு எல்லாமே புதுசாக இருக்க தொடர்ந்து தியேட்டரை நோக்கி ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், ஜவான் திரைப்படம் 9வது நாளில் 735.02 கோடி ரூபாயை வசூல் ஈட்டியிருப்பதாக வழக்கம் போலவே ஒரு பைசா விடாமல் புள்ளி விவரமாக ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படிங்க: யுத்தத்தை விட ரத்தத்துக்குத்தான் அதிக பவர்! ஒரே நிமிஷத்துல தட்டி தூக்கிய லோகேஷ்! பரிதவிக்கும் ‘ரஜினி170’

சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், 900 கோடி முதல் 1000 கோடி வரை ஜவான் படம் அதிரடியாக இந்த வார முடிவில் வசூல் செய்யும் என்கின்றனர்.

அட்லீ, ஷாருக்கான், அனிருத், தீபிகா படுகோன், சானியா மல்கோத்ரா உள்ளிட்ட படக்குழுவினர் ஒரே பார்ட்டி மோடில் இருப்பதாகவும் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா வெற்றி கொண்டாட்டங்களை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story