பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அசோக் செல்வன்… விரைவில் கேட்கப்போகும் டும்டும் சத்தம்… யார்ன்னு தெரியுமா?
வளர்ந்து வரும் நடிகர்
தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அசோக் செல்வன். “சூது கவ்வும்”, “பீட்சா 2”, “தெகிடி”, “நித்தம் ஒரு வானம்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள அசோக் செல்வன், தற்போது “நெஞ்சமெல்லாம் காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கதைத்தேர்வில் வித்தியாசம்
இவரின் கதை தேர்வு மிகவும் வித்தியாசமாக இருக்கும். வந்த கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடிக்காமல் மிகவும் செலக்டிவ்வாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக அசோக் செல்வன் திகழ்கிறார். மேலும் மிகை நடிப்பு அல்லாமல் தமிழ் சினிமாவின் மிக யதார்த்த நடிகராகவும் பல இளம் பெண்களின் மனதை கொள்ளைக்கொண்டவராகவும் அசோக் செல்வன் வலம் வருகிறார்.
சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த “நித்தம் ஒரு வானம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வித்தியாசமான மிகவும் சுவாரஸ்யமான ஒரு காதல் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்த அசோக் செல்வனை குறித்து தற்போது ஒரு மங்களகரமான செய்தி வெளிவந்துள்ளது.
தயாரிப்பாளரின் மகளுடன் காதல்
அதாவது நடிகர் அசோக் செல்வன், ஒரு பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம். அந்த பெண்ணும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறாராம். அந்த பெண்ணை இரு வீட்டார் சம்மதத்தோடு அசோக் செல்வன் திருமணம் செய்துகொள்ளப்போகிறாராம். மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அசோக் செல்வனும் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும் டேட்டிங்கில் இருந்ததாக கிசுகிசுக்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1950களிலேயே உலக நாயகன்தான்… சிறு வயதிலேயே கமல்ஹாசன் செய்த சாதனை… என்ன தெரியுமா?